கொற்றிகோடு சேகர சபையின் புனித செவ்வாய் ஆராதனை


தற்போது உலகம் முழுவதும் கொரானா வேகமாக பரவி வருவதால் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு நிலுவையில் உள்ளதால் மக்கள் நேரடியாக ஆலய ஆராதனையில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.  

மக்கள் ஆலயத்திற்கு வர இயலாமல் இருந்தாலும் வீட்டிலிருந்தே ஆலய ஆராதனையில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக இணைய தளங்களில் பதிவேற்றி வருகிறோம்.  இந்த வாரம் புனித வாரமாக இருப்பதால் இந்த வாரம் தினமும் ஆராதனை நடைபெறும். சேகரத்து போதகர் அருள்திரு. டேவிட் றாபி ஜேக்கப் தலைமையில், இரண்டாம் போதகர் அருள்திரு போவாஸ் முன்னிலையில் ஆராதனை நடைபெற்றது.   ஆலயம் வர முடியவில்லை என்றாலும் வீட்டிலிருந்தே ஆராதனையில் பங்கேற்று இறையாசி பெற சபைக்குழு சார்பாக வேண்டுகிறோம். 

Comments