Monday, March 18, 2019

கொற்றவை நிலை

போருக்குச் செல்வோர் கொற்றவையின் பெருமைகளைக் கூறி அத் தெய்வத்தை வழிபட்டுச் செல்லுதலே கொற்றவை நிலை எனப்படுகின்றது.

தொல்காப்பியத்தில் கொற்றவை நிலை பற்றி தெரிவிக்க பட்டுள்ளது. 

தமிழ் இலக்கணத்தில் கொற்றவை நிலை என்பது புறப்பொருள் திணைகளுள் ஒன்றான வஞ்சித் திணையின் ஒரு துறை அல்லது உட்பிரிவு ஆகும். போருக்குச் செல்லும் வேந்தன் வெற்றி பெறுவதற்கான கொற்றவையின் அருள் குறித்துக் கூறுவது இது. இதனால் இது கொற்றவை நிலை எனப் பெயர் பெற்றது. எனினும் இத்துடன் போருக்குச் செல்லும் வீரர்களது போர்த்திறம் குறித்துக் கூறுவதும் இத்துறையுள் அடங்கும்.

இதனை விளக்க, நீண்ட தோளினையுடைய வேந்தன் வெற்றி பெறுவானாக என்று நல்ல பொருட்கள் நிரம்பிய பாத்திரத்தை உயர்த்திப் பகைவரைப் புறமுதுகிட வைக்கும் கொற்றவைத் தெய்வத்தின் நிலையைக் கூறியது என்னும் பொருள்படும்;

நீள்தோளான் வென்றி கொள்கென நிறைமண்டை வலனுயரிக்"
கூடாரைப் புறங்காணும் கொற்றவைநிலை யுரைத்தன்று

0 comments:

Post a Comment

Updates Via E-Mail