லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் 12 வது ஆண்டு நிறைவு விழா...

                   பொதுவாக டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 என்றாலே,ஆண்டின் இறுதி நாளும் வருடத்தின் துவக்க நாளும் தான் ஞாபகம் வரும்.

               ஆனால் கொற்றிகோடு பகுதியில்,இந்த இரு தினங்கள் வரும் போது ஞாபகம் வருவது லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் ஆண்டு விழா தான்.

              லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்பானது,கொற்றிகோடு மட்டுமல்லாது  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைவராலும் பேசப்படும் அழவிற்கு இன்று உயர்ந்து உள்ளது.எதனை பிரச்சனை வந்தாலும் அதை தாண்டி வெற்றி பெறுவதே கிளப்பின் தாரக மந்திரம்.

             இப்படியாக இன்றைய தினம் தன்னுடைய 12 வது வயதை வெற்றி கரமாக பூர்த்தி செய்கிறது லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்.இன்று காலை ஆண்டு விழாவை முன்னிட்டு கொற்றிகோடு  பகுதியே விழா கோலம் பூண்டுள்ளது.

             காலை 7 மணிக்கு ஜோதி ஓட்டமானது,மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.

           இப்போது கன்னியாகுமரி மாவட்ட அழவிலான கபடியானது மிகவும் விறு விறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

            கிளப்பின் அனைத்து  நிகழ்வுகளின் அட்டவணையையும் அடுத்த பதிவில் காணலாம்.

Comments

Post a Comment