Thursday, August 28, 2008

இளமையும் வலிமையும்

இளமையும் வலிமையும் என்ற பதிப்பின் ஆரம்பம் .
முன்னுரை ,
இளமை என்பது என்ன இப்போது இளமையும் வலிமையும் ,அதன் முக்கியத்துவம் என்ன ,என்ற பல கேள்விகள் நம் மனதில் எழலாம். இளமை என்பது மிகவும் முக்கியமான பருவம் . இளமையில் நாம் எந்த பாதையை தேர்ந்தேடுக்கிறோமோ,அந்த பாதையில் உறுதியாய் இருந்தால் நாம் வெற்றியை பெற்று கொள்ளலாம் .இளமை என்பது அனைவரும் விரும்பும் பருவம் ,பல முதியவர்கள் நான் இப்போதும் இளமையாக இருக்கமாட்டேனா என்று ஏங்குவது உண்டு .அந்த பருவத்தில் தான் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும் .நரம்புகள் சுறுசுறுப்பாக இயங்கும் .பொதுவாக சொல்வார்கள் கல்லை தின்றால் கூட செரிக்கும் என்று அந்த அளவிற்கு உடல் உறுப்புகள் தன் வேலையை செய்யும் . வாழ்கையில் நினைப்பதை நடத்த வேண்டுமென மனம் துடிக்கும் .இந்த பருவத்தில் இளைஞ்சர்களுக்கு அறிவுரை என்பது பிடிக்காது ,அதற்க்காக நான் மட்டும் ஏன் இப்படி ஒரு தலைப்பை எடுத்தேன் என நினைக்க வேண்டாம் ,இது அறிவுரை அல்ல இளமை பருவத்தில் ஒரு இளைஞ்சனானாலும் ஒரு இளைஞ்சியானாலும் சந்திக்கும் பிரச்சனைகள் ,அதை சந்திக்கும் விதம் என்பதை பற்றிய கட்டுரை, ஏனெனில் என் வாழ்க்கையாக இருந்தாலும் சரி என்னை போன்ற மற்றவர்களின் வாழ்க்கையானாலும் சரி அனுபவித்து அதை உணர்ந்து எழுதிகிறேன் .அனுபவம் என்பது இரண்டு வகை ஒன்று நம் அனுபவத்தில் தெரிந்து கொள்வது இன்னொன்று மற்றவர்களின் அனுபவத்தில் தெரிந்து கொள்வது ,
எனவே இந்த கட்டுரையானது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் இதை கொற்றிகோடு லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்பிற்கு சமர்பிக்கிறேன் .
அன்புடன்
தா .சுரேஷ் குமார்
இளமை என்பது
இளமை இது வாழ்கையின் முக்கியமான பருவம் ஒரு குழந்தை தன் தாயின் வயிற்றிலிருந்து மண்ணில் விழும் வரையில் தாய்க்கு ஏற்படுகிற வலியும் தன் குழந்தை நலமுடன் பிறக்குமா என்று ஏக்கத்துடன் ஒரு மகிழ்ச்சியை எதிர்பார்த்து காத்திருக்கும் தந்தை மற்றும் உறவினர்களுக்கு உள்ள போராட்டம் மிக குறைவுதான் .பிறந்த குழந்தையானது மெல்ல மெல்ல வளர்ந்து தன்னுடைய பதினெட்டாவது வயதை எட்டி பின் முப்பத்தைந்தாவது வயதை கடக்கும் வரை தாயின் மனதில் ஏற்படும் வலியும் தந்தையின் போராட்டமும் குழந்தை பிறக்கும் போது ஏற்படும் வலியை விட பலமடங்கு .
ஆம் இளமை என்பது பதினெட்டு வயது முதல் முப்பத்தைந்து வயது வரை .இன்று இந்தியாவை பார்த்தால் அதிக சதவீத இளைஞ்சர்கள் காணப்டுகின்றனர் ,இது நம் நாட்டிற்கு மிக பெரிய பலம் .வேகம், துடிப்பு ,இவைகள் தான் இளமையின் அடையாளங்கள் .கலாசார சீரழிவு ஒருபுறம் நம்மை தொடர்ந்தாலும் ,இணையவலையில் இணைந்தாலும் ,நம் உறுதியில் வாழ்க்கையின் திருப்பு முனையை உருவாக்கும் பருவம் ,இந்த பருவத்தில் தான் வாழ்க்கை தீர்மானிக்க படுகிறது . இந்தியாவில் வாலிபர்கள் அதிகமாயிருந்தும் நம்மால் ஒலிம்பிக்கில் ஒரு தங்கம் தானே எடுக்க முடிந்தது .அது ஒருபுறம் இருந்தாலும் .தவறான முடிவுகளை எடுத்து தவறான பாதையில் சென்று வாழ்கையை சீரழித்தவர்கள் ஒருபுறம் , சிற்றின்பத்தில் சிக்கி சிதறுண்டவர்கள் ஒரு புறம் ,போதையிலே மூழ்கி பேய் பிடித்தவர்கள் ஒருபுறம் முடிவுகளை மற்றவர்கள் எடுக்க தலையாட்டி பொம்மையாய் இருக்கும் இவர்கள் ஒருபுறம் .இப்படித்தான் வாழவேண்டும் என்பதை விட்டு எப்படியும் வாழலாம் என்றிருப்பவர்கள் ஒரு புறம் ,இப்படியாக இளமையை தொலைத்தவர்கள் சில நேரங்களில் இந்த நாட்டுக்கு இழப்புதான் .இருந்தாலும் இந்த நாட்டின் வலிமையே இளமை தான் ,நம்மால் முடியும் இந்த இளமையில் எந்த பிரச்சனைகளை நாம் சந்திக்கிறோம் ,
துள்ளி ஓடும் மானும் சீறும் சிங்கமும் இந்த இளைஞ்சனுக்கு பயப்படும் .இதுதான் இளமை பருவம் , "வால வயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகழுக்கு ஒப்பாயிருக்கிறான் "என்று வேதாகமம் சொல்கிறது , அமெரிக்கா அதிபர் ஆபிரகாம் லிங்கன் தன் முதிர் வயதிலும் நான் இளமையாயயிருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் .அவ்வளவு முக்கியத்துவமானதும் வலிமைமிக்கதுமான இளமையை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் .என்பதை இந்த கட்டுரை மூலம் சிந்திப்போம் .
அடுத்து இளமையில் சந்திக்கும் சவால்கள்
இளமையை எப்படி பயன்படுத்துவது
என்ற வெளியீடுகளை அடுத்த பதிப்பில் பார்போம்
நன்றி !



Updates Via E-Mail