Monday, May 9, 2011

மேல்நிலை தேர்வில் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் சாதித்த மனிலிக்கரை மாணவர்கள்

தமிழகம் முழுவதும் மேல்நிலை பள்ளிகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று அதிகார பூர்வமாக வெளியிடப்பட்டது. குமரி மாவட்ட அளவில் கொற்றிகோடு அருகே மணலிக்கரையில் அமைந்துள்ள புனித மரிய கொரற்றி மேல்நிலை பள்ளி மாணவ மாணவிகள் மாநில மற்றும் மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளார்கள். 

மாநில அளவில் தாவரவியல்(Botany) பாடத்தில் மாணவி றிபானா இரண்டாம் இடம் பெற்றுள்ளார். 

மாவட்ட அளவில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை இதே பள்ளி மாணவர்கள் தட்டி சென்றுள்ளனர். முதலிடத்தை ஜோஸ் ரிஜான் 1180 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இதே பள்ளியை சார்ந்த அபினாஸ் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். 

ஜோஸ் ரிஜான் பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார் என்பது குறிப்பிட தக்கது. 

மாவட்ட மாநில அளவில் சாதனைகள் படைத்து பள்ளிக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்த மாணவர்களுக்கும் மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகிகளுக்கும் பெற்றோர்களுக்கும் கொற்றிகோடு லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.      

3 comments:

தமிழ்த்தோட்டம் said...

பாராட்டுக்கள்

KISINGER PAULRAJ said...

மாவட்ட மாநில அளவில் சாதனைகள் பல படைத்து நான் படித்த பள்ளிக்கும்,ஊருக்கும் பெருமை சேர்த்த மாணவர்களுக்கும்,கற்பித்த ஆசிரியர்களுக்கும் மற்றும் உறுதுணையாக இருந்த பிள்ளைகளை பெற்றோர் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். பாசமுடன் உங்களில் ஒருவன் கிசிங்கர் பால்ராஜ்,கொற்றிகோடு (குமரி மாவட்டம்) / சென்னை. தொடர்புக்கு : +91-9094651688

KISINGER PAULRAJ said...

மாவட்ட மாநில அளவில் சாதனைகள் பல படைத்து நான் படித்த பள்ளிக்கும்,ஊருக்கும் பெருமை சேர்த்த மாணவர்களுக்கும்,கற்பித்த ஆசிரியர்களுக்கும் மற்றும் உறுதுணையாக இருந்த பிள்ளைகளை பெற்ற பெற்றோர் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். பாசமுடன் உங்களில் ஒருவன் கிசிங்கர் பால்ராஜ்,கொற்றிகோடு (குமரி மாவட்டம்) / சென்னை. தொடர்புக்கு : +91-9094651688

Post a Comment

Updates Via E-Mail