Monday, March 7, 2011

தமிழ் அழிந்தால் தெய்வம் அழியும் , தெய்வம் அழிந்தால் தமிழ் அழியும் தெய்வ மொழிக்கு ஏதடா அழிவு ?

கொற்றிகோடு இணையம் சார்பாக குமரி ஆதவனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் இலக்கிய சாதனையாளர் குமரி ஆதவன் அவர்களின் பதில்களும்

உங்களுக்கு சிறு வயது முதலே தமிழ் இலக்கியம் மீது ஆர்வம உண்டுமா ? எப்படி இந்த ஆர்வம வந்தது ? 

தாய்மொழி தமிழ் என்கிற உணர்வு வகையில் தமிழ் மீது  ஆர்வம் சிறுவயது முதலே இருந்தது . ஆனால் தமிழ் இலக்கியம் மீதான ஆர்வம் நான் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் போதுதான் ஏற்பட்டது .கற்பிக்க பட்ட பாடங்கள் , கற்ப்பித்த விதம் ,சமூகத்தை கூர்ந்து பார்க்கிற பருவம் ,இளகிய நூல்கள் பல வாசிப்பதற்கான வாய்ப்பு இவையெல்லாம் தான் ஆர்வத்திற்கு  காரணம் .. 

நீங்கள் வெளியிட்ட புத்தகங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகம் எது ? ஏன் பிடித்தது ?

 ஒரு தாயிடம் போய் நீங்கள் பெற்ற பிள்ளைகளில் மிகவும் பிடித்த பிள்ள எதுவென்று  கேட்டால் என்ன பதில் கூறுவீர்கள் ?! அந்த தாயின் நிலைமைதான் என்னிடமும் காணபடுகிறது . நான் எழுதிய புத்தகம் எல்லாமே தனித்துவம் கொண்டவை தான்; எல்லாம் என்னக்கு பிடித்தவைதான் . ஆனால் பிறரால் பெரிதும் பாராட்ட பட்ட நூல்கள் உண்டு . அருமை மகளே - கவிதை நூல் முன்னாள் ஜனாதிபதி  மேதகு. டாக்டர் . அப்துல் கலாம் அவர்களின் பாராட்டை கடிதத்தையும், நூலக கட்டமைப்பின் ' நல்நூல் ' விருதையும் பெற்றது . அதுபோல் 'குல குழைய முந்திரிக்காய்' என்ற அழிந்து வரும் கிராமிய விளையாட்டுகள் குறித்த நூலும் , ' தெற்கில் விழுந்த விதை ' நூலும் அறிஞர்  பெருமக்களின் பாராட்டுகளை பெற்றதாகும் ..... 

தமிழகத்தில் இப்போது தமிழ் எந்த நிலையில் இருக்கிறது ?

பெரு நகரங்களை தவிர்த்து கிராமங்களில் தமிழ் ஓரளவு பாதுகாப்பாக உள்ளது . ஆனால் ஓட்டுமொத்த தமிழிலும் , தமிழரிலும் சிதைவுகள் ஏற்பட்டுள்ளதை ஒப்புகொள்கிறேன் ..பல்வேறு படையெடுப்புகள் , ஆட்சி மாற்றங்கள் , வைதீக மதம்  தொடங்கி தமிழருக்குள்நுழைந்த  பல்வேறு மதங்கள் இவையனைத்தும் தமிழ் பண்பாட்டிலும் , மொழியிலும் ஊடுருவி தமிழை சிதைத்தன . இதனால் தமிழருக்குள் இருந்த தூய தமிழ் மொழி, தமிழ் பண்பாடு  ஆகியவை கலப்புகளால் கதிகலங்கி நிற்கின்றன ..........  


இன்னும் சில ஆண்டுகளில் தமிழ் எழுத்தில் மட்டும் தான் இருக்கும் பேச்சில் இருக்காது என சொல்ல படுகிறது அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? 

  உலகில் தோன்றிய எத்தனையோ மொழிகள் அழிந்து போயுள்ளன . ஆனால்' கல் தோன்றி மண் தோன்ற காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி ' பேசிய தமிழ் மொழி இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றால் அதன் செழுமை,எழுமை தான் காரணம் .உலக மொழியியல் அறிஞர் நோவம் காம்சி  ஒரு காலத்தில் உலகமுழுவதும் இருந்த மூலமொழி அநேகமாக தமிழ் ஆகத்தான் இருக்கும் என்கிறார் . உலகின் மிகப் பழமையான செம்மொழி  வரிசையில் உள்ள கிரேக்கம் , இலத்தீன் ,ஹீப்ரு ,சமஸ்கிருத மொழிகளில் கூட தமிழ் உள்ளது .எனவே செம்மொழி அழியும் என்பதை ஏற்றுகொள்ள முடியாது .இதனால் தான் எனது ' எரிதழல் கொண்டுவா ' கவிதை நூலில் தமிழ் அழிந்தால் தெய்வம் அழியும் , தெய்வம் அழிந்தால் தமிழ் அழியும் தெய்வ மொழிக்கு ஏதடா அழிவு ? என்று தமிழை நீச மொழி என்று பழித்தவரை சாடியிருந்தேன் ..............



................தொடரும் 

1 comments:

Unknown said...

தொடரட்டும்

Post a Comment

Updates Via E-Mail