Friday, February 4, 2011

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? சரி பார்த்து கொள்ளுங்கள்

ஜனநாயகத்தில் மக்களுக்கு கிடைத்த ஒரே உரிமை ஓட்டுரிமை. பலரும் வாக்களிக்க செல்லும் போது வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இல்லாமல் வாக்களிக்க முடியாமல் திரும்பி இருக்கிறார்கள். மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையில் மக்கள் பிரதிநிதிகளை மக்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்திய அரசியல் அமைப்பு சட்ட படி பதினெட்டு வயது நிரம்பிய ஆண் பெண் இருபாலருக்கும் வாக்களிக்கும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. நம்மை யார் ஆட்சி செய்ய வேண்டியதும் நாம் தான். முதலில் உங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை சரி பார்த்து கொள்ளுங்கள். விடுபட்டிருந்தால் உடனடியாக வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர்களை சேர்க்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்து கொள்ளுங்கள். 

இன்னும் இரண்டு மாதத்தில் தமிழ்நாடு சட்ட சபைக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தின் தலைவிதியை நீங்கள் தீர்மானிக்க போகிறீர்கள் எனவே உங்கள் பெயர்களை இந்த நேரத்தில் நீங்கள் சரி பார்த்து கொண்டால் உங்கள் உரிமையை நீங்கள் நிலை நாட்டலாம். தமிழ் நாடு தேர்தல் ஆணையத்தின் மூலம் கடைசியாக புதுப்பிக்க பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதை இந்த இணைப்பில் சென்று பார்க்கலாம் புதுப்பிக்க பட்ட வாக்காளர் பட்டியல் .  

தமிழில் தேட இந்த இணைப்பில் செல்லலாம்   இந்த இணைப்பில் சென்று உங்கள் மாவட்டம், உங்கள் தொகுதி நீங்கள் தேர்வு செய்து உங்கள் பெயர்கள் இருக்கிறதா என்றும் பார்க்கலாம். 

பதமனாபபுரம் தொகுதிக்கு உட்பட்டவர்கள் மேற்கண்ட இணைப்பின் மூலமாகவும் பார்க்கலாம். நேரடியாக உங்கள் பெயர்கள் மூலம் தேட இந்த இணைப்பில் சென்று உங்கள் பெயர் உங்கள் உறவினர் பெயர் கொடுத்து தேடலாம்.   

குமாரபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு வாரியாக பெயர் பட்டியல் பார்க்க கீழ்க்கண்ட இணைப்புகளில் செல்லவும்.

குமாரபுரம் பேரூராட்சி 



மேலும் தகவல்களுக்கு இந்த இணைப்பில் சென்று உங்கள் வார்டு, வாக்களிக்கும் இடம், பிளாக் இவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து சரி பார்த்து கொள்ளுங்கள். 

1 comments:

Unknown said...

நல்ல தகவல் ஆனால் என் பெயர் இல்லை

Post a Comment

Updates Via E-Mail