Friday, February 4, 2011

சமூக விடுதலைக்கு வித்திட்ட கிறிஸ்தவத்தின் இன்றைய பரிதாப நிலை

தமிழ் நாட்டிலேயே கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் மாவட்டமாக குமரி மாவட்டம் திகழ்கிறது அதே நேரம் கல்வியறிவிலும் முதன்மை பெற்ற மாவட்டமாக திகழ்கிறது.  பலருக்கு இது எப்படி சாத்தியம் ஆனது என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. 

Charles Mead

இரண்டு  நூற்றாண்டுகளுக்கு முன்பு குமரி மாவட்டம் கிறிஸ்துவை பற்றி அறியாத மாவட்டமாக தான் இருந்து வந்தது. காளியையும் , இசக்கியையும் , சொள்ள மாடனையும் தான் இந்த மக்கள் வழிபட்டு வந்தனர். கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் மன்னராட்சியின் கட்டு பாட்டில் இருந்தது. அப்போது இந்து மனுதர்மத்தின் ஆட்சி நடை பெற்றது. இந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார்(நாடார்), பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள்ளிட்ட 18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இவர்கள் மார்பகத்தை திறந்து போடுவதுதான் உயர் சாதியினருக்குத் தரும் மரியாதை என்று தரம் தாழ்ந்த எண்ணத்தில் திருவாங்கூர் சமசுதானம் ஒரு நடைமுறையை வகுத்திருந்தது. இதன்படி 18 சாதிகளைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியாமல் அவமானத்துடன் வாழ்ந்து வந்தனர். 

சாதி ஒடுக்கு முறைகள் நடந்த நேரத்தில் தான் கிறிஸ்தவத்தை பரப்பும் விதமாக   றிங்கல்தௌபே , மீட் ஐயர்  போன்ற  பாதிரியார்கள் குமரி மாவட்டம் வந்து இறைபணி ஆற்றினர்.  இந்த மக்கள் கல்வி கற்க வசதியும் இன்றி , மேல் சாதி மக்களால் ஒடுக்க படும் அவல நிலைகளை கண்டு முதலில் இந்த மக்களுக்கு அடிப்படை உரிமைகள் தேவை என்பதை உணர்ந்து கிறிஸ்தவத்தை பின்பற்றிய மயிலாடி வேதமாணிக்கம் அவர்கள் உதவியோடு சிறிய கல்வி கூடம் றிங்கல்தௌபே அவர்களால் ஏற்படுத்த பட்டது . பின்னர் நாட்கள் போக போக இந்த மக்களுக்கு மருத்துவ வசதிகளும் சிறிது சிறிதாக ஏற்படுத்த பட்டது. 

குமரி மாவட்ட பெண்கள் மேலாடையின்றி வீதிகளில்

தாழ்த்த பட்டவர்கள் என ஒதுக்க பட்டவர்கள் இடுப்பிற்கு மேலே உடை அணிய அப்போதைய மன்னராட்சியில் தடை விதிக்க பட்டது . இதே நிலை பெண்களுக்கும் ஏற்பட்டது . உயர் சாதி பெண்கள் தங்கள் மார்பை மறைக்க அனுமதி அளிக்கப்பட்டது. இப்படி ஒரு கொடூரமான ஒடுக்கு முறை உலகில் எங்கேயும் நடக்கவில்லை என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.  இந்த நிலையில் தான் சமூக விடுதலை வேண்டி பலர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்கள். இந்நிலையில் கொற்றிகோடு, மண்டைக்காடு போன்ற பகுதிகளில் இறைபணி ஆற்றிய மீட் பாதிரியார் அவர்கள் கிறிஸ்தவ பெண்கள் மார்பகத்தை மறைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதனால் கிறிஸ்தவ பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைத்தனர். 

இதனை பொறுக்க முடியாத மேல் சாதியினர் கலவரங்களை உண்டு பண்ணினார் . குமரி மாவட்டத்தில் பல இடங்களில் கலவரங்கள் வெடித்தன.  மீட் ஐயர் அவர்கள் ஆங்கிலேய தளபதி கார்னல் நேவால் என்பவருக்கு இச் சம்பவங்களைப் பற்றி விரிவாக கடிதம் எழுதினார் . இதன் பயனாக பத்மநாபபுரம் நீதி மன்றத்திற்கு ஆங்கிலேய தளபதியால் உத்தரவு பிறப்பிக்க பட்டு கிறிஸ்தவ பெண்கள் மட்டும் மேலாடை அணிவிக்க அனுமதி கொடுக்க பட்டது.  அடக்கு முறையிலிருந்து மாறுவதற்காக பலரும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். இவர்களை பின்பற்றி இந்து நாடார் பெண்களும் மேலாடை அணிய தொடங்கினர். இதே போல் பல போராட்டங்கள் நடந்து தான் ஒரு சமூக விடுதலை உருவானது. 

இன்றைய நிலை

இந்த கிறிஸ்தவ பாதிரியார்களால் உருவாக்க பட்ட பல கல்வி கூடங்கள் , மருத்துவ மனைகள் குமரி மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இறைபணி என்பது ஒரு சேவை போன்றது என்பதை குமரி மாவட்டத்தில் சாதித்து காட்டியவர்கள் தான் இந்த பாதிரியார்கள். இவர்களை போல் பல பாதிரியார்கள் இங்கு வந்து சேவை பணி என்னும் இறை பணியாற்றியதன் விளைவு தான் குமரி மாவட்டம் கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ள மாவட்டமாகவும் கல்வியறிவில் கூடிய மாவட்டமாகவும் திகழ்கிறது. 

ஆனால் இன்று கிறிஸ்தவம் வெறும்  அருட்செய்தியாகவே இருக்கிறதே தவிர அன்பு பணி இல்லை.  கிறிஸ்தவம் இன்று சோம்பேறிகளுக்கு பணம் கொடுக்கும் ஒரு மதமாக மாறி கொண்டிருக்கிறது. வீட்டிற்கு ஒரு ஆலயங்கள் கட்டி மக்களை இந்த உலகிலிருந்து வேறு உலகிற்கு கொண்டு செல்வது போல் ஒரு பிரமையை ஏற்படுத்தி உணர்வுகளை தூண்டி விட்டு காணிக்கை என்ற பெயரில் தங்கள் பாக்கெட்டுகளை நிர்ப்புவதாகவே இருக்கிறது.  

இன்றைய கிறிஸ்தவர்கள் மத்தியில் சமூக அவலங்களை குறித்து எந்த ஊழியரும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது இல்லை. இரவு நேரத்தில் தெரு விளக்குகள் இல்லாத நேரத்தில் இருட்டை பார்த்து பேயாகவும், பிசாசாகவும் மனதில் கற்பனை செய்து கொண்ட மக்கள் மத்தியில் இன்று பேயும், பிசாசும் உண்மை என்ற செய்திகளை இந்த ஊழியர்கள் சொல்லி வருகின்றனர். ஒரு காலத்தில் இந்து மதத்தில் இருந்த மூட நம்பிக்கைகள் அனைத்தும் இப்போது கிறிஸ்தவ மதத்தில் இருக்கிறது.  இதில் பெரும்பாலும் பெண்கள் பாதிக்க படுகின்றனர். 

வெளிநாட்டு கிறிஸ்தவ  பாதிரியார்களால் உருவாக்க பட்ட அமைப்புகள் தான் C.S.I , R.C போன்ற சபைகள். இந்த அமைப்புகளில் கல்வி நிறுவனங்கள், மருத்துவ கூடங்கள் இருக்கின்றன(இன்று இந்த நிறுவனங்களும் வணிக மயம் ஆகி கொண்டிருக்கிறது ). இந்த சபைகளில் வரும் காணிக்கைகளுக்கு தனியாக கணக்குகள் இருக்கும். இந்த பணம் ஏதோ ஒரு வகையில் மக்களுக்கே பயன் படும். ஆனால் தனியாக ஆலயங்கள் நடத்துகிறவர்கள் கடவுளுக்கென்று காணிக்கை வசூலிக்கிறார்கள், அந்த பணத்திற்கென்று எந்தவொரு கணக்குகளும் இருப்பதில்லை. கடவுளுக்கென்று கொடுக்கும் காணிக்கைகள் எங்கே செல்கிறது ஒரு தனிநபர் வாழ்க்கையை சுகபோகமாக அனுபவிக்க செல்கிறது.   

கடவுளை தங்களுக்குள்ளே தேட வேண்டும் என்பதை மறந்து மக்கள் தங்களின் பேராசைகளுக்காகவும், பயத்தின் விளைவாகவும் , நிம்மதியின்மையின் விளைவாகவும் கடவுளை எங்கேயோ தேடி செல்கின்றனர்.  எனக்கு தெரிந்து பெந்தேகோஸ்த் கூட்டங்களுக்கு போகிற பலரை பார்த்திருக்கிறேன் அவர்கள் ஒரு நிம்மதியற்ற வாழ்வில் தான் வாழ்ந்து வருகிறார்கள். இப்படி பட்ட கூட்டங்கள் கூடியதால் செய்வினை, கைவிசம், பில்லி சூனியம் போன்ற மூடநம்பிக்கைகள் மக்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது. இந்த போலி பாதிரியார்கள் வாஸ்து பார்கிறார்கள், நல்லநேரம் குறித்து கொடுக்கிறார்கள், ஒரு மந்திரவாதி என்னவெல்லாம் செய்வாரோ அதையெல்லாம் இவர்கள் செய்கிறார்கள்.  

லட்சகணக்கான பணங்கள் இவர்களுக்கு ஏமாந்த கிறிஸ்தவர்களால் காணிக்கை என்ற பெயரில் கிடைக்கிறது. இதில் யாரும் சேவை பணிகள் செய்வதில்லை.  கடவுள் மீது பற்று இருக்கிறதோ இல்லையோ ஆனால் இந்த போலி ஊழியகாரகளிடம் சிக்கி அடிமையாக பல மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். உண்மையான கிறிஸ்தவம் என்பது அன்னை தெரசாவும், ஸ்டுவர்ட் ஸ்டைன்  போன்ற கடவுள் பணியாளர்கள் தான். சேவை பணி தான் கடவுள் பணி என இவர்கள் நினைத்து செயல் படுத்திய காரணத்தால் தான் இன்றும் கிறிஸ்தவம் உயிர் பெற்று நிற்கிறது.    

மக்கள் தெளிவாக ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். சமூக அவலங்களில் இருந்து விடுபடவும் அடிப்படை உரிமைகளான கல்வி, மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் மக்கள் கிறிஸ்தவத்தை ஏற்று கொண்டார்களே தவிர   வெறுமனே அற்புதங்களை நம்பி ஏற்று கொள்ள வில்லை. இன்றைய வேண்டுதல்கள் எல்லாமே சுயநலம் மிக்கதாய் இருக்கறது. எப்போது சுயநலம் கூடுகிறதோ அப்போதே நீங்கள் கிறிஸ்தவர்கள் அல்ல.  பிரார்த்தனை என்பது ஒரு மன நிம்மதியை தான் தரும். ஆனால் நாம் வாழும் முறை தான் நம் வாழ்க்கையை பயனுள்ளதாக்கும். 

எப்போது  போலி பாதிரியார்களிடமிருந்து மக்கள் விடு பட்டு வருகிறார்களோ அப்போது தான் சுயநலம் மாறி பொது நலம் ஏற்படும். சமூக மாற்றங்கள் உருவாகும் ஆரோக்கியமான கிறிஸ்தவம் ஏற்படும். " இந்த எளியவனில் ஒருவனுக்கு நீ எதை செய்கிறாயோ அதை நீ எனக்கே செய்தாய்" சேவை பணி தான் இறை பணி ஒரு வேளை உணவிற்கு வழியற்று எத்தனையோ மக்கள் இப்போதும் வாழ்கிறார்கள், பள்ளி கூடங்கள் காணாத எத்தனையோ சிறுவர்கள் இருக்கிறார்கள் அவர்களை தேடி பிடித்து உதவுவோம் இது தான் கடவுளுக்கு கொடுப்பது.  

மூடநம்பிக்கைகளிலிருந்து எப்போது ஒரு சமுதாயம் விடுபடுகிறதோ அது தான் உண்மையான விடுதலை.              
மீண்டும் ஒரு சமூக விடுதலையை நோக்கி .........................

நல்லது எது கெட்டது எது என்று சிந்திப்போம் சிந்திக்கும் போது தான் பயணிக்கும் பாதை தெளிவாகும். இந்த பதிவு என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள் மாற்று கருத்துக்கள் உங்களுக்கு இருக்கலாம். எதுவானாலும் நீங்கள் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.  ஆரோக்கியமான விவாதங்கள் கூட நல்ல சிந்தனைகளை உருவாக்கும்.  

18 comments:

Robin said...

மிஷனரிகள் செய்த அரும்பணியால்தான் கன்னியாகுமரி மாவட்டம் வளர்ச்சி பெற்றது என்றால் அது மிகையாகாது. மிஷனரிகளை கொச்சைப்படுத்தும் காவிக் கூட்டத்தினருக்கு இது புரியாது.

இன்றைய காலக்கட்டத்தில் கிறிஸ்தவர்களை மத வியாபாரிகள் ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள் என்பதும் உண்மைதான். இன்னும் நாம் மாற வேண்டியிருக்கிறது.

தமிழ்த்தோட்டம் said...

மிஷனரிகள் செய்த அரும்பணியால்தான் கன்னியாகுமரி மாவட்டம் வளர்ச்சி பெற்றது என்றால் அது மிகையாகாது. மிஷனரிகளை கொச்சைப்படுத்தும் காவிக் கூட்டத்தினருக்கு இது புரியாது.

இன்றைய காலக்கட்டத்தில் கிறிஸ்தவர்களை மத வியாபாரிகள் ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள் என்பதும் உண்மைதான். இன்னும் நாம் மாற வேண்டியிருக்கிறது.

Suresh Kumar said...

@ Robin
/////////

மத வியாபாரிகள் ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள் என்பது மட்டுமல்லாமல் மக்களை சிந்திக்க விடாமல், மக்கள் மத்தியில் ஏதோ ஒரு பயத்தை உருவாக்கி மக்களை உணர்வு ரீதியாக ஒரு அடிமை வாழ்க்கைக்கு கொண்டு செல்கிறார்கள்.

இன்று கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களும் சேவை பணியிலிருந்து வணிக மயமாகி கொண்டிருக்கிறது.

கிறிஸ்தவ சமூகத்தில் காணப்படும் மூடநம்பிக்கைகள் விலகும் வரை கொச்சை படுத்துபவர்கள் இருக்க தான் செய்வார்கள்.

Suresh Kumar said...

@ தமிழ்த்தோட்டம் ////////


உங்களுக்கு குமரி மாவட்டமா? எந்த ஊரு?

ஜெறின் said...

குமரி மாவட்டத்தில் இப்படி ஏமாத்து காரர்கள் ஏமாத்தி கொண்டிருகிறார்கள் என்றால் உண்மை தான்,

ஆனால்,ஒட்டுமொத்தமாக எல்லோரையும் குறிப்பிடுவது சரியில்லை.

ஒரு சிலர் செய்கிற தவறுகளால்,நல்லவர்களுக்கு எதற்காக இந்த அவல பெயர் கொடுக்க வேண்டும்???

Suresh Kumar said...

@ ஜெறின் /////////

நல்லவர்களுக்கு எப்போதும் அவல பெயர் கிடைக்காது. மற்றவர்கள் கிறிஸ்தவத்தை எதை வைத்து மதிப்பீடு செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். கிறிஸ்தவம் ஒரு சமூக அமைப்பை கட்டி எழுப்ப வேண்டும். சமத்துவம் பரவலாக்க பட வேண்டும். ஏற்ற தாழ்வு மனப்பான்மைகள் மாற வேண்டும். பிறருக்கு உதவும் மனப்பான்மை உருவாக வேண்டும்.

ஆனால் இன்று அமைப்புகளின்றி துவங்கிய பல திருச்சபைகளால் சுயநலமே மேலோங்கி நிற்கிறது. மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று வேதாகமம் காட்டிய வழியை தாண்டி இன்று கிறிஸ்தவ மதம் என்றால் பேய், பிசாசுகளை விரட்டும்(மந்திரவாதிகளின்) மதமாக மாறி கொண்டிருக்கிறது.

இது மக்களின் அறியாமை, மூட நம்பிக்கை இவைகள் மாறினால் தான் கிறிஸ்தவத்தின் மதிப்பீடுகள் நல்லதாக இருக்கும் . நன்றி ஜெரின்

ஜெறின் said...

இதற்க்கு நான் சொல்லும் கருத்து,



ஏமாறுபவர்கள் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்வார்கள்...

Anonymous said...

//இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு குமரி மாவட்டம் கிறிஸ்துவை பற்றி அறியாத மாவட்டமாக தான் இருந்து வந்தது. //

தவறான செய்தி!! வரலாறு பத்தி எழுதும் போது கொஞ்சம் கவனமாக எழுதலாமே

Suresh Kumar said...

ஜெறின் said...

இதற்க்கு நான் சொல்லும் கருத்து,



ஏமாறுபவர்கள் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்வார்கள்...
////////////////////

கிறிஸ்தவத்தை பற்றி சரியான புரிதல் வந்தால் ஏமாறுபவர்கள் இருக்க மாட்டார்கள் தானே

வின்னர் said...

நல்ல கருத்துக்கள்

Unknown said...

தோழரே நீங்கள் இந்த வகையில் பதிவு செய்தால் உங்களுக்கு பதிவுகள் கிடைக்கும் விவாதங்கள் வலுக்கும் .. கிறிஸ்தவத்தை பற்றி புரிந்துள்ள கருத்துகளை நீங்கள் எடுத்துரைத்தால் நலமாக இருந்திருக்கும் . மாறாக இந்த மாதிரியான விவாதங்களை தவிர்ப்பது நல்லது என கருதுகிறேன் .............. நீங்கள் குறிப்பிட்டுள்ள கருத்தில் உண்மை கிறிஸ்தவர்கள் மனம் புண்படும் என்பதை மறந்து விடாதீர்கள்

Suresh Kumar said...

@shibi ///////////////


நண்பரே நான் எங்கேயுமே உண்மை கிறிஸ்தவர்கள் மனம் புண்படும் படியாக பேசவில்லையே.

முதலில் நமது குறைகளை ( பலவீனம் ) எப்போது நாம் தெரிந்து கொள்கிறோமோ அப்போது தான் நிறைகள் வரும்.வெளிஉலகிற்கு எப்போதும் உண்மையானவர்களை பற்றி தெரியாது போலியானவர்களை பற்றி தான் தெரியும். இதனால் உண்மையாய் இருக்கிற எல்லோருக்கும் சேர்ந்து தான் கெட்ட பெயர்.

எனவே முதலில் நாம் செய்ய வேண்டியது போலிகளை கண்டு பிடித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். அதை விட்டு விட்டு கடவுள் பார்த்து கொள்வார் என கடவுள் மீது பாரத்தை போட்டால் கடவுளாலும் காப்பாற்ற முடியாது.

உண்மையானவர்கள் யாரும் மனம் புண்படும் படியாக எடுத்து கொள்ள மாட்டார்கள். ஏனெனில் இந்த பதிவே உண்மையை விரும்பும் பலருடைய ஆதங்கமே.

Unknown said...

மிகத் தேவையான பதிவு.
உண்மையில் ஏசுவுக்கே அவர் பெயரால் ஒரு கார்பரேட் மதம் இருக்குமெனத் தெரியாது.

////இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு குமரி மாவட்டம் கிறிஸ்துவை பற்றி அறியாத மாவட்டமாக தான் இருந்து வந்தது. //
தவறான செய்தி!! வரலாறு பத்தி எழுதும் போது கொஞ்சம் கவனமாக எழுதலாமே//

என்னுடைய கருத்தும் இது தான்.

//சொள்ள மாடன்// - சுடலை மாடன்.

saarvaakan said...

அருமையான பதிவு,
கிறித்தவம் சாதியத்தையும் தன்னுள் ஏற்று கொண்டிருப்பதும் ஒரு குறைபாடே.சாதியம்+ மூட நம்பிக்கையின் மொத்த உருவமாக விளங்குகிறது என்றால் மிகையாகாது.மதங்கள் ,மதவாதிகளின் செயல்கள் விமர்சிக்கப் படுவதே அவர்களை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
நன்றி

திருத்தமிழ்த் தேவனார் said...

முக்குவர் வரலாறை பற்றி எழுதும்பொது கவனமாக வரலாறு தெரிந்து எழுதுங்கள். உங்கள கட்டுரையில், ''இந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார்(நாடார்), பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள்ளிட்ட 18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது என்று சொல்கிறீர்கள். மகாராணி, முக்குவ பெண்களை போல் சாணார் பெண்கள் கட்டி சேலை கொண்டு மார்பை மறைத்து கொள்ளலாம் என சொன்னதை படிக்கவில்லையா? வரலாறு தெரியாம என்ன மையிர எழுதுற.

hi said...

This post is so full of blunders. Historical errors and incoherence run right through the article. Internet is a public forum and therefore know the facts beore you publish.

பாரம்பரிய மீனவன் said...

முக்குவர் மீனவர் பரவர் பட்டினவர் பட்டணவர் பரதவர்
'முக்குவர் பெண்களுக்கு தோள் சீலை அணிய தடை விதிக்கப்பட்டிருந்தது' என்ற தவறான தகவல் இந்த பதிவில் உள்ளது. சாணார் இன சகோதரர்களே, சக இனத்தவர்களை பற்றி தவறான பரப்புரை செய்யாதீர்கள்.

பாரம்பரிய மீனவன் said...

முக்குவர் மீனவர் பரவர் பட்டினவர் பட்டணவர் பரதவர்
'முக்குவர் பெண்களுக்கு தோள் சீலை அணிய தடை விதிக்கப்பட்டிருந்தது' என்ற தவறான தகவல் இந்த பதிவில் உள்ளது. சாணார் இன சகோதரர்களே, சக இனத்தவர்களை பற்றி தவறான பரப்புரை செய்யாதீர்கள்.

Post a Comment

Updates Via E-Mail