Sunday, January 30, 2011

கொற்றிகோடு வரலாற்று சிறப்பும் பெயர் காரணமும்

       முச்சங்கம் வைத்து தமிழ்வளர்த்த சேர,சோழ,பாண்டிய மூவேந்தருள்  முதன்மை பெற்ற சேர நாட்டின் தென் பகுதியில், கடல் கொண்ட லெமுரியா கண்டத்தின் எஞ்சிய பகுதியாக நின்று, இன்று முக்கடல் முத்தமிட, முத்தமிழ் கொந்தளிக்க , நஞ்சையும் , புஞ்சையும் கொஞ்சி விளையாடி பல இலக்கிய சுவை கூறும் குமரி மாவட்டத்தில் திருவனந்தபுரம் நாகர்கோயில் நெடுஞ்சாலையில் தக்கலை பகுதியிலிருந்து  பிரிந்து மார்த்தாண்டவர்மா மன்னரால் 17 ஆம் நூற்றாண்டில்  நட்டாலத்து நீலகண்டபிள்ளை என்ற தேவசகாயம் பிள்ளையின் மேற்பார்வையில் கட்டப்பட்ட வரலாற்று புகழ் கூறும் பத்மனபாபுரம் கோட்டை வாசலை முத்தமிட்டு செல்லும் குலசேகரம் சாலையில் , குமாரபுரம்  சந்திப்பில் ராஜீவ் காந்தி சிலை இடத்திலிருந்து பிரிந்து சிலப்பதிகாரம் காப்பிய புகழ் கூறும் பெருஞ்சிலம்பு  செல்லும் பாதையில் இரு பக்கமும் அமைந்திருக்கும் ஊர்தான் கொற்றிகோடு. இவ்வூர் மக்கள் இன்று பெருஞ்சிலம்பு வரை பரவி வாழ்கிறார்கள் . எனவே இவ்வூர் இன்று பெருஞ்சிலம்பு வரை பரவி விரிந்துள்ளது .
 வேளிமலை தோற்றம் 

இயற்கை அன்னை எழில் நடனமிடும் இக்குமரிமாவடத்தின்  மையபகுதியில்  மாவட்டத்தின் இதயம் போன்று அமைந்து , வானுயர மப்புடன் உயர்ந்து நின்று இளம்தென்றல் வீசி வரும் சுகம் கொடுக்கும் எழில் மிகு பசும்சோலைகளையும் கொண்டு ,முக்கனியும் ,தேங்கனியும் முதிர்ந்து , பணப்பயிரும்,மணபயிரும், குணப்யிரும் வாரிவழங்கி இம்மாவட்டத்தின் ஜீவாதாரமாக அமைந்திருப்பதும் , தமிழர்களின் தனித்தெய்வமான எழில்மிகு திருமுருகன்  தன் இதயம் கவர்ந்த கன்னி ,அன்று தினைப்புலம் காத்த வள்ளியை  தேடிவந்து திருவிளையாடல் நடத்திய இடமும் , தக்கராஜன் வேள்வி வளர்த்த இடமாகையால் இம்மலைக்கு வேளிமலை என்று வரலாறு கூறுவதுமான வேளிமலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் இவ்வூரார் வேளிமலையிலிருந்து உதித்து வரும்உதயசூரியனை காலையில் கிழக்கு திசையில் கண்டு தங்கள் வாழ்க்கையை தொடங்குகின்றனர்.


இவ்வூரின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் வேளிமலை முகட்டிலிருந்து உற்பத்தியாகி இம்மாவட்டத்தில்  விளைந்தோடி வளபடுத்தும் ஆறுகளில் ஒன்றான கயலைகள் துள்ளி ஓடும் வள்ளி ஆறு இவ்வூரின் தெற்கு எல்லையிலும் , இன்னொன்றான தட்சணகோதையாறு என்ற சடையாறு இதன் வடக்கு எல்லையிலும் வளைந்தோடியும், பேச்சிபாறை  பெருஞ்சாணி அணைகளின் நீரைசுமர்ந்து வரும் பத்மனபாபுரம் புத்தனாறு என்ற வெட்டாறு  இதன் தென்மேற்கு  எல்லையில் விளைந்தோடி வளபடுத்தியும், இதன் 3 திசைகளிலும் விளைந்தோடி அரண்போல் அமைந்த பத்மனபாபுரம் புத்தனாறை கடந்து செல்ல குமாரபுரம் அம்மன்கோயில் பக்கமுள்ள பாலம் மட்டும் இதன் முக்கிய கணவாய் போன்று அமைந்த ஓர் பாதுகவல் ஊர்தான் கொற்றிகோடு .


          இவ்வளவு பாதுகாவலும் செல்வசெழிப்பும்  கொண்டு குறிஞ்சியும் ,முல்லையும் , மருதமும் ,ஒருங்கே அமைந்த  இவ்வூரிலே ஒரே மொழி பேசும் ஒரே இனம்  குழுமி வாழ்ந்து கொண்டிருகிறது . இந்த இனம் தான்  நாட்டின் தலைமக்களான நாடன் இனம். நாடாண்ட பரம்பரைக்கு சொந்தக்காரன் .சேரநாட்டை  மட்டுமின்றி இமயம் வரை இந்தியாவை ஆண்டதும் இவ்வினமே என்று இளம்பிள்ளை எழுதிய " பண்டைய கேரளம் " என்னும் நூலில் 198 ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. தன் உயிரே போவதாய் இருந்தாலும்  கூட போர் நெறியிலிருந்து பின்வாங்கவோ , முன் வைத்தகாலை பின் வைக்கவோ , புறமுதுகிடவோ  மாட்டார்கள் , இதற்கு சான்றாக விளங்கியதால் சான்றோர் எனப்பட்டனர் . சேரனின் போர்ப்படை வென்று(கிரேக்கம்  வென்று )" இமயத்தடக்கிய சேரன்" என்று சிலப்பதிகாரமும் , பின் நாகரீகத்தில் பிறந்தவன் நாடான் , அவன் கள்ளையும், பதநீரையும் ,பனம்பால்(அக்கானி) கொடுத்து வளர்க்கப்பட்டவன். சான்றோர்  இன நாடான் என அகிலத்திரட்டு அம்மானையும் கூறுகிறது .
பழைய வரலாற்றுகளிலே . சங்க இலக்கியங்களிலே வெற்றிவேண்டி போர் தொடுத்து செல்லும் வேந்தர்கள் தங்கள் வெற்றிக்காய் கொற்றவை தெய்வத்தை(பத்திரகாளியை) வேண்டிகொண்டனர் . கொற்றவையை வெற்றிதேவதயாக வழிபட்டனர். தங்கள் நாடார் குலத்தை பனம்பால் கொடுத்து வளர்த்த கொற்றவையை இவ்வூர் மக்கள் தங்கள் குலதெய்வமாககொண்டு  வழிபட்டு அன்று வாழ்ந்திருந்தார்கள் . இத்தகவலை பெயர் தெரியாத ஒரு புலவர் எந்த நாளிலோ எழுதி வில்லுப்பட்டுகளில் பாடிவந்த பாடலான




                                         "கட்ட கட்ட உச்ச நேரம்"
                                           காளியம்மா வாற நேரம்
                                          பொட்டகுளத்து  இசக்கி யம்மை
                                          பொழுதடைய வாற நேரம்"


புத்தனாறு 


என்ற வரிகளால் தெரிய வருகிறது . இதிலிருந்து கூழக்கடை பக்கமுள்ள மக்கள் பொட்டைகுளக்கரையில் காளி (கொற்றவை) கோயில் இருந்ததாகவும் அங்கிருந்த மக்கள் காளியை  குல தெய்வமாக கொண்டு வழிபட்டதும்  தெரிய வருகிறது .
(இப்பாடல் மீட் நினைவு ஆலய 150 வது விழா மலரில் பக்கம் 44 ல்  இடம்பெற்றுள்ளது).


                      ஆனால் கி. பி. 1818 ல் பண்டைய வேணாட்டில் இன்றைய குமரி மாவட்டத்தில் மயிலாடியை மையமாக கொண்டு திருதொண்டாற்ற  சங். சார்லஸ் மீட் அவர்கள் வந்தார்கள் .திருவிதாங்கூர் ஆட்சியாளர்களால் தாழ்த்தப்பட்டு அடிமைபடுத்தபட்டு கிடந்த நாடார் குலத் தமிழர்களின் விடுதலைக்காய் தோள்சீலை போராட்டத்தை நடத்தியவரும் , ஆட்சியாளர்களின் அனுமதியால் நாகர்கோயில் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவரும் , இன்று நாகர்கோயிலில் தன்னாட்சி கல்லூரியாக (autonomouse college )ஆக வளர்ந்திருக்கும் scott christian  college - அன்று  ஆரம்ப பாடசாலையாக ஆரம்பித்தவரும் ,1828 ல் நெய்யூரை தலைமையிடமாககொண்டு செயல் பட்ட நெய்யூர் மருத்துவமனையை நிறுவியவருமான  மேலே குறிப்பிட்ட சார்லஸ் மீட் ஐயர்  அவர்கள் 1830 ல் கிறிஸ்தவ நற்செய்தியை தெரிவிக்கும் படி கொற்றவையை  வழிபட்ட மக்கள் வாழ்ந்த கொற்றிகோட்டிற்கு  வந்தார் . அவர் அவர்களிடம் கிறிஸ்தவத்தை போதித்து திருத்தொண்டாற்றினார் அவரது போதனையால் தங்கள் குல வழிபாட்டை விட்டு ,இயேசு கிறிஸ்துவை ஏற்றுகொண்ட மக்கள் , தங்கள் குல தெய்வ சிலையையும் , வஸ்திரங்களையும் ,பூததடிகளையும் , கிலுக்குமணியையும்  சார்லஸ் மீட்  அவர்களிடம் ஒப்படைத்தனர் .


                          அவைகளை பெற்று கொண்ட மீட் ஐயர் அவர்கள் , அவற்றை லண்டனில் உள்ள ஆஸ்டின் பிரேயர்ஸ் என்ற  பொருட்காட்சி சாலைக்கு அனுப்பி வைத்து விட்டு   கொற்றவை தெய்வ வழிபாட்டிற்கு ஒரு கோடு போட்டு நிறுத்திவிட்டு கொற்றிகோடு குளத்திற்கும் பொட்டைகுழி குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியான சீனிவிளையில் ஓர் கிறிஸ்தவ ஆலயத்தை கட்டி , கிறிஸ்தவ சமயதொண்டும், அங்கு ஓர் பாடசாலையை கட்டி கல்வியறிவு புகட்டி , சமுதயதொண்டும் ஆற்றி அச்சமுதாயத்தை வளர்ச்சி பாதைக்கு எடுத்து சென்றார் . அவர் வைத்த" கொற்றவைகோடு" காலபழக்கத்தில் மருவி "கொற்றிகோடு " ஆக மாறியது . இவ்வாறாக கொற்றிகோடு பெயர் பிரபலமாகி இன்று  வெற்றிகள் பல குவிக்கும் கொற்றிகோடாக மாறி வெற்றிகள் குவித்துகொண்டிருக்கிறது .மீட் ஐயர் தன்  குறிப்பில் "KOTTICODE  IS THE HEAVEN OF SOUTH TRAVANCORE "என்று குறிப்பிட்டுள்ளபடி மேன்மை பெற்று திகழ்கிறது .




எழுதியவர் : உலக தமிழ் எழுத்தாளர் கொற்றை இ . ஞானதாஸ் (+919944373580) 
                          கொற்றிகோடு குமாரபுரம் அஞ்சல் 


பதிவு செய்தவர் : ஜே.டி .சிபி டேவிட 

35 comments:

Kiruba Daniel J said...

" KOTTICODE IS MY HEAVEN "

Suresh Kumar said...

இவ்வளவு வரலாறுகள் புதைந்திருக்கும் கொற்றிகோட்டின் வரலாறுகளை இன்று எல்லோரும் அறிந்து கொள்ளும்படி இதை எழுதிய உலக தமிழ் எழுத்தாளர் கொற்றை ஞானதாஸ் அவர்களுக்கும். இதை பதிவு செய்த சிபி அவர்களுக்கும் நன்றி

Unknown said...

மீட் ஐயர் பணி மிகவும் பெரியது ,, நன்றி கொற்றை அவர்களே ..

Unknown said...

கொற்றிகோடில் வாழ்வதற்கு பெருமை படுகிறேன்

Unknown said...

இதை பதிவு செய்தவன் என்ற முறையிலும் பெருமையடைகிறேன். இந்த வாய்ப்பை தந்த எழுத்தாளர் அவர்களுக்கும் சுரேஷ் குமார் லக்கி ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்

Suresh Kumar said...

அருமையான முறையில் அருமையான எழுத்துக்களால் எழுதியிருக்கிறார். எனக்கு கூட இப்போது தான் இதன் வரலாறு முழுவதும் தெரிந்திருக்கிறது . வரலாறுகளை அனைவரும் தெரிந்து வைக்க வேண்டியது அனைவரதும் கடமை

ஜெறின் said...

உன்னுடைய ஊர் என்வென்று கேட்டால் கொற்றிகோடு என்பேன்....

ஆனால்,

கொற்றிகோடு என்ற பெயர் எப்படி வந்தது என்று கேட்டால்,,,

தெரியாமல் முழித்து கொண்டிருந்தேன்...

இப்போது கிடைத்தது பதில்...

பெயர் விழக்கத்தை அருமையாக விழக்கிய கொற்றை ஞானதாஸ் அவர்களுக்கும்,

அதை பதிவேற்றிய நண்பர் சிபி டேவிட் அவர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்...

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

அம்மை தேசம்
தந்தை தான் தெய்வம்,
தாய் தான்அப்பன் தெய்வம்,
அம்மை தேசம்
தந்தை தான் தெய்வம்,
தாய் தான் என்னுடைய ஊர் kotticode

jerin hilbert kuwait

Vinoth said...

போர் நெறியிலிருந்து பின்வாங்கவோ , முன் வைத்தகாலை பின் வைக்கவோ , புறமுதுகிடவோ மாட்டார்கள் , இதற்கு சான்றாக விளங்கியதால் சான்றோர் எனப்பட்டனர் . சேரனின் போர்ப்படை வென்று(கிரேக்கம் வென்று )" இமயத்தடக்கிய சேரன்" என்று சிலப்பதிகாரமும் , பின் நாகரீகத்தில் பிறந்தவன் நாடான் , அவன் கள்ளையும், பதநீரையும் ,பனம்பால்(அக்கானி) கொடுத்து வளர்க்கப்பட்டவன். சான்றோர் இன நாடான் என அகிலத்திரட்டு அம்மானையும் கூறுகிறது .////////////////////

இப்போ எல்லோரும் புறமுதுகிட்டு தானே ஓடுறாங்க

Rajan said...

wow nice article

Mano said...

Kotticode la ivvalavu kathai irukka? Pernchilampuna chilampu kathaiya?

Kotticode said...

@ Vinoth ////////


யாரை சொல்றீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?

JR said...

Thanks to Ganadhas for giving this article about our "HEAVEN" Kotticode and its History and thanks to Shibi david also for posting this.
This will help everyone to know about the history of our hometown
Be proud to be "kotticoddan"
Now only i came to know that Meet Iyar has done a wonderful and great work(Social Service and Missionary) for our Kotticode People.

Let us keep Kotticode as "HEAVEN" always

Unknown said...

கன்னியாகுமரி மாவட்டத்தை பற்றி ரொம்பவே புல்லரிக்கும் படியாக உணர்ச்சிவசத்தில் பதிவு செய்துள்ளது புரிகிறது. நாடார், சான்றோர் மட்டுமல்லாமல் சாணார் என்பவர்கள் யார் என்றும் பதிவு செய்திருக்கலாம்!!

Suresh Kumar said...

@Jeyahar

நீங்கள் சொல்லும் சாணார் என்பவர்களும் நாடார், சான்றோர் என்பவர்களும் ஒருவரே. சேர நாடு முடிவுற்று திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்டு குமரி மாவட்டம் வந்த போது குமரி மாவட்ட மக்கள் ஒரு சில சாதி மக்களால் சாணார் என்று தீண்டத்தகாதவர்களாக மிதிக்க பட்டு சாதி கொடுமைக்கு உள்ளாக்க பட்டனர். இந்த பதிவு என்பது கொற்றிகோட்டு வரலாறும் சிறப்பும் மட்டுமே. குறிப்பாக கொற்றிகோடு என்ற பெயர் வந்த வரலாறு பற்றிய பதிவு இது.

இரு நூற்றாண்டுகளாக குமரி மாவட்ட மக்கள் அனுபவித்த சாதி கொடுமைகள் வேறு யாரும் இந்த அளவிற்கு சாதி கொடுமைக்குள்ளாக்க பட்டிருக்க மாட்டார்கள் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.

இந்த பதிவின் நோக்கமே சாதியை முன்னிலை படுத்துவதில்லை சாதி கொடுமைகளால் எங்கள் முன்னோர்கள் அனுபவித்து வந்த கொடூரங்களை கேட்டிருக்கிறோம். அதை பற்றிய பதிவு இன்னொரு நாளில் வரும். இது கொற்றிகோட்டின் பெயரில் புதைந்திருக்கும் வரலாறு பற்றியது.

Anonymous said...

Wow...nice explanation about "OUR Kotticode"..Thanks to Kottai E Gnanadhas for gave this nice explanation,he was made it nicely.Thanks to shibi & suresh for posted these details in website.We must know more & more about our place...continue to get more details & "Our Kotticode" must known to everybody....we are "One"!.Keep Growing...on & on. Thanks & regards by Kisinger Paulraj, Kotticode (K.K.Dist) / Chennai.for contact: +909 4651 688

Kotticode said...

Thanks Kisinger

Unknown said...

//இந்த இனம் தான் நாட்டின் தலைமக்களான நாடன் இனம். நாடாண்ட பரம்பரைக்கு சொந்தக்காரன் .சேரநாட்டை மட்டுமின்றி இமயம் வரை இந்தியாவை ஆண்டதும் இவ்வினமே என்று இளம்பிள்ளை எழுதிய " பண்டைய கேரளம் " என்னும் நூலில் 198 ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. தன் உயிரே போவதாய் இருந்தாலும் கூட போர் நெறியிலிருந்து பின்வாங்கவோ , முன் வைத்தகாலை பின் வைக்கவோ , புறமுதுகிடவோ மாட்டார்கள் , இதற்கு சான்றாக விளங்கியதால் சான்றோர் எனப்பட்டனர் .//

இப்படிப்பட்ட வஞ்சபுகழ்ச்சிகள்(!) கட்டுரையில் நிரம்ப இருப்பதால் தான் நானும் அதை பற்றி கேட்டேன். சொத்துகள் வைத்திருந்த நாடார்கள், ஒன்றும் இல்லாத நாடார்களை சாணார் என்று அவர்களுக்குள்ளே ஏற்றத்தாழ்வுகளை கடைபிடித்ததும் வரலாறு தான். உங்கள் ஊரை அதனுடைய வரலாறை ஆவணப்படுத்துவது சிறப்பு தான். ஆனால் அதீத மிகைப்படுத்துதலால் வரலாற்று உண்மைகள் எல்லாம் இருட்டடிப்பு செய்யப்படும் என்பதை மறந்துவிடாதீர்கள். நன்றி.

DEVA ANBU said...

நமது ஊரான கொற்றிகோடின் வரலாற்றை சிறப்பிக்கின்ற இந்த பக்கம் , நமது ஊர் பெருமைகளை அழகாக உணர்த்துகிறது . இந்த வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்ளும்படியாக எழுதிய உலக தமிழ் எழுத்தாளர் கொற்றை இ. ஞானதாஸ் அவர்களுக்கு நன்றி. இதை இணையத்தளத்தில் வெளியிட்ட சிபி டேவிட் அவர்களுக்கும் நன்றி .

Kotticode said...

இப்படிப்பட்ட வஞ்சபுகழ்ச்சிகள்(!) கட்டுரையில் நிரம்ப இருப்பதால் தான் நானும் அதை பற்றி கேட்டேன். சொத்துகள் வைத்திருந்த நாடார்கள், ஒன்றும் இல்லாத நாடார்களை சாணார் என்று அவர்களுக்குள்ளே ஏற்றத்தாழ்வுகளை கடைபிடித்ததும் வரலாறு தான். உங்கள் ஊரை அதனுடைய வரலாறை ஆவணப்படுத்துவது சிறப்பு தான். ஆனால் அதீத மிகைப்படுத்துதலால் வரலாற்று உண்மைகள் எல்லாம் இருட்டடிப்பு செய்யப்படும் என்பதை மறந்துவிடாதீர்கள். நன்றி ////////////////////

@ Jeyahar ////////////

நீங்கள் கோடிட்டு காட்டிய வரிகள் எழுத்தாளர் ஆதாரத்துடன் தான் பதிவு செய்திருக்கிறார்.அதே நேரம் நீங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் உண்மை தானே தவிர இதை மறுக்க வில்லை.

எப்படி நாடார்கள் குறிப்பிட்ட ஒரு சாதியால் சாணார் என அழைக்க பட்டு தீண்டத்தகாதவர்களாக சாதி கொடுமைக்கு உள்ளாக்க பட்டார்களோ, அதே போல நீங்கள் சொல்வதை போல் சொத்துக்கள் வைத்திருந்த நாடார்களும் மேல் சாதியினருடன் சேர்ந்து சாணார்கள் என்று ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தி இழிவு படுத்த பட்டார்கள் என்பது உண்மை தான்.

முன்னர் வசதி வாய்ப்புகளில் குறைந்தவர்கள் வெள்ளை வேட்டி கட்டி சென்றால் ஏளனம் பேசியவர்கள் இப்போதும் எங்கள் ஊரிலும் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் என்ன செய்வது அன்று ஏளனம் பேசியவர்களை ஏளனமாக்கபட்டவர்கள் இன்று தங்கள் உழைப்பால் பின்னுக்கு தள்ளி இருக்கிறார்கள்.

நாடார்கள் அன்று ஒடுக்க பட்டார்கள். இன்று நாடார்களாலும் சிலர் ஒடுக்க படுகிறார்கள் ஏற்ற தாழ்வுகள் என்பது ஒன்றில் மாறி இன்னொன்றில் பற்றி கொண்டிருக்கிறது.

எப்போது எல்லோரும் அண்ணன் தம்பிகளாக பழகுகிரார்களோ அப்போது தான் சாதியின் பெயரால் உள்ள ஏற்ற தாழ்வுகள் மறையும். இல்லாத பட்சத்தில் ஏதோ ஒரு வகையில் எளியவன், வலியவன் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் .

மீண்டும் சொல்லுகிறேன் இது சாதியை முன்னிலை படுத்திய பதிவு அல்ல. நாங்கள் சாதியை தாண்டி பழகுகிறவர்கள்.

Kotticode said...

நன்றி ஜெயகர் தொடர்ந்து எங்களோடு இருங்கள். உங்கள் கருத்துக்கள் எங்களை மேலும் மெருகூட்டும்.

Anonymous said...

Ethai koduthenum,eppadu pattenum, makkalai mayakki, madham parappum madhaveri piditha kumbal thaan christhuvarkal.....
Englishkaaranin matha maatrathirkku mayangi avan kudutha salugaigalukku aasai pattu matham maariyavarkale inraya christhuvarkal.....
sontha mathathil peratchanai enraal veru madhathukku maaruvirkala? athai seri seyya muyarchi panna maatingala?
rendu moonu thalaimuraikku munnala matham maarittu, KK dist kerela la irukara christians ennamo bethlahamla poranthu valantha maathiri scne create panringa?
vellakaranoda mathathukku maari avanukku adimaya irunthu unga originality ayum uniqueness ayum tholatha makkal thaan neengal.

Unknown said...

Mr.பெயரிலி,

குமரிமாவட்ட இந்து அடிப்படைவாதிகள் ஒவ்வொருவரின் மனதிலும் குறிப்பாக நாடார் சாதியினரிடம் இருக்கின்ற மிக மேம்போக்கான ஒரு எண்ணத்தை தான் நீங்களும் இங்கே பதிவு செய்திருக்கின்றீர்கள்.

//Ethai koduthenum,eppadu pattenum, makkalai mayakki, madham parappum madhaveri piditha kumbal thaan christhuvarkal.....//
நிகழ்காலத்திலும் நடப்பவை தான். ஆனால் நிறைய பேச வேண்டியுள்ளது!!

//Englishkaaranin matha maatrathirkku mayangi avan kudutha salugaigalukku aasai pattu matham maariyavarkale inraya christhuvarkal.....//
முடிந்தால் இதை படியுங்கள்

http://kumarikantam.blogspot.com/2011/01/blog-post_17.html

//rendu moonu thalaimuraikku munnala matham maarittu, //
புனித தோமையார் (இயேசுவின் சீடர்) கேரளா வந்த ஆண்டு கிபி 52. கிறிஸ்தவ மதத்தின் வேர் அப்போதே வந்துவிட்டது. குறிப்பாக குமரிமாவட்டத்தில் கிபி 1544 ல் புனித சவேரியார் கோட்டாரில் ஆலயம் ஒன்றை கட்டினார். அவருடைய மத பிரசாரத்தின் போதே சிலர் மதம் மாறிவிட்டனர். அதன் பிறகு சீர்திருத்த கிறிஸ்தவர்கள் அதிகம் பேர் எப்படி குமரியில் கிறிஸ்தவத்தை பின்பற்றினர் என்பதை மேலே உள்ள சுட்டியில் படித்திருப்பீர்கள்(?).

//vellakaranoda mathathukku maari avanukku adimaya irunthu unga originality ayum uniqueness ayum tholatha makkal thaan neengal.//
நீங்க இந்தியால தான் இருகிங்களா அண்ணே!!! வெள்ளைகாரனுக்கு அடிமையா இங்க உள்ள கிறிஸ்தவர்கள் இருகிறார்களா! இல்லை இந்தியாவே இருக்கிறதா :)

Unknown said...

Mr. பெயரிலி,
உங்க கிட்ட ஒண்ணு கேட்க மறந்துட்டேன்.
நீங்க என்ன இந்து?

Anonymous said...

"நான்"!,"நீ"!..என்ற வேறுபாடுகளைக் களைந்து சாதி,மத ஏற்ற தாழ்வுகளை வெறுத்து "நாம்" என்ற உணர்வினை "நம்" மக்கள் வளர்த்தால் வரும் தலைமுறை அனைவருக்கும் நாம் வரலாற்று புகழ் கூறும் உயிருள்ள சிற்பங்களாக ஒவ்வொருவரின் மனதிலும் இடம் பிடிப்போம்....!!!! -நாமும் வாழ வேண்டும்,நம்மைச் சார்ந்தவர்களும் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொள்வோம்- பாசமுடன் உங்களில் ஒருவன் கிசிங்கர் பால்ராஜ்,கொற்றிகோடு (குமரி மாவட்டம்) / சென்னை. தொடர்புக்கு: +91 - 9094651688

Anonymous said...

http://www.vinavu.com/2009/10/06/nagma-hallelujah/

Anonymous said...

\\புனித தோமையார் (இயேசுவின் சீடர்) கேரளா வந்த ஆண்டு கிபி 52// ethavathu saatchi irukutha?

AD 52 la thomas india ku vanthirunthaal een europe maalumikal india ku vara vazhi theriamal kasta pattarkal?????

Anonymous said...

oru hindu va iruntha thaan christhuvarkal panra kiruthanathayum maanam ketta seyalayum sutti kaata venduma?
en oru muslim? oru boudhan, oru naathikan panna kudatha?

ungaludaya originality um uniqueness ayum maranthu christhuva matha pothakarkal/ matha veriyarkalin brain wash ku mayangi poi irukara maanam ketta makkal thaan neengal.

Anonymous said...

kaan irunthum kurudar.... aarivu irunthum moodar.... kumari mavatta/kerela christians

Indian said...

ஜயஹர், கிருஸ்துவர்காள பத்தி சொன்னா உடனே ஹிந்து வானு கேட்குறியே, ஏன் வேற யாரும் நியாயாதத கேட்க கூடாதா? இதுல இருந்தே உன் ம்த வெறி தெரியுது.
கிபி 52 ல தாமஸ் வந்தாருநு சொல்றியே இது அப்பட்டமான பொய் னு உனக்கே தெரியும். அப்படி தாமஸ் அப்பவே வந்திருந்தா எதுக்கு வெள்ளக்காரங்க வியாபாரம் செய்ய இந்தியா க்கு கடல்ல வழி தேடி திருஞ்சாங்க ? வெள்ளக்காரங்க தமிழ் நாட்டுக்கு வந்ததே 1600 கு அப்புறம் தான்.
Brain wash பண்ணி உங்க மதத்துல ஆள் சேத்துரீங்களே, மதம் என்ன MLM (Multi Level Marketting) ah? Christians எல்லாரும் Brain wash செய்யப்பட்டு சுயமா சிந்திக்க தெரியாதவர்கள்.

அடக்குமுறை இருந்தது அதனால மதம் மாறுனோம் னு சொல்றியே, அமெரிக்க ல உங்க வெள்ளக்கார christians பண்ணாத அடக்குமுறயா? இல்ல இன படு கொலயா?
அப்ப அந்த கருப்பு மக்கள் மதம் மாறுனான்காளா?
மார்ட்டின் லூதர் கிங் பத்தி உனக்கு சொல்ல வேண்டாம் னு நெனைக்ககறேன்.
KK dist ல எல்லாரும் வெள்ளக்காரன் பெயர வச்சிரிக்கீங்களே அதுல கொஞ்சமாவது Originality/Nativity இருக்கா ?

மனசாட்சி இருந்தா இது உங்களுக்கு புரியும்.

Anonymous said...

கிறிஸ்த்தவ மதத்தை வெள்ளகாரன் மதம் என்கிறீர்களே. ஆங்கிலம் கூட வெள்ளகாரன் மொழி ஆச்சே எதுக்குடா ஆங்கிலம் படிக்குறீங்க?

Unknown said...

new to me sir........informative

Kotticode said...

padmapriya said...
new to me sir........informative //////

Thank you Padma priya for visit and comment our Kotticode site.

By Suresh kumar

மாலதி said...

சிறந்த ஆக்கம் பாராட்டுகள்

Post a Comment

Updates Via E-Mail