Wednesday, January 19, 2011

இலக்கிய சாதனையாளர் குமரி ஆதவன்

முக்கடலும் சங்கமிக்கும் குமரி எல்லையில் மலைகளின் மடியில் தவழும் கொற்றிகொட்டிற்கு பெருமை சேர்த்து கொண்டிருக்கும் கவிஞர் தான் குமரி ஆதவன் . ஜெஸ்டின் பிரான்சிஸ் என்னும் இயற்பெயர் கொண்ட இவர் தமிழகத்தில் மிகவும் பிரபலமான் புனித மரிய கொரற்றி மேல் நிலை பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி கூடவே தமிழுக்கும் தொண்டாற்றி வருகிறார் . இவரை பற்றிய ஒரு சிறு அறிமுகம் தான் இந்த பதிவு . 


இலக்கியத்திற்கும் பெருமை சேர்த்தவர்கள் பலர் உருவாகிய ஊர் தான் கொற்றிகோடு . அந்த வகையில் சாதனையாளராக குமரி ஆதவனை அறிமுக படுத்துவதில் கொற்றிகோடு இணைய குழு பெருமை அடைகிறது . 04 ஆகஸ்ட்  1970 ஆண்டு பிறந்த இவர் சிறு வயது முதலே பேச்சில் சிறந்து விளங்கியவர் . அமுத சுரபி கலை இலக்கிய பேரவை செயலாளராக இருக்கும் இவர் மேடை பேச்சுகளிலும் பட்டி மன்ற பேச்சுகளிலும் சிறந்து விளங்குபவர். தமிழாலயம் , தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் , களரி பண்பாட்டு ஆய்வு மையம் , தமிழ்நாடு அறிவியல் கழகம் போன்றவைகளில் உறுப்பினர்களாகவும் பொறுப்பாளராகவும் இயக்க பணிகளை சிறப்பாக செய்து வருகிறார் .

சன் டிவி அரட்டை அரங்கத்தில் இரண்டு முறை கலந்து கொண்டு முதன்மை பேச்சாளராக அனைவருடைய பாராட்டையும் பெற்றார் . முதல் முறை வரலாற்று சிறப்பு மிக்க குமரி மாவட்ட நாடார்களுக்கு ஏற்பட்ட தீண்டாமை கொடுமையை எதிர்த்து போராட காரணமான நிகழ்வான தாலி அறுத்தான் சந்தை நிகழ்ச்சியை மிக அருமையாக பதிவு செய்தது அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது . 


இவருடைய எழுத்துக்களும் பேச்சுக்களும் சமூக நோக்கு கொண்டதாக இருக்கும் . இவருடைய' சிகரம் தொடு " என்ற கவிதை ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடமாக உள்ளது . நதி ஓடி கொண்டிருக்கிறது என்ற சிறந்த ஆவண குறும்படத்திற்கு எழுத்து இயக்கம் போன்ற பணிகளை செய்திருக்கிறார் . கன்னியாகுமரி என்ற திரைப்படத்திற்கு இரண்டு பாடல்களை எழுதியுள்ளார் . "இனியொரு சுதந்திரம் " என்ற விழிப்புணர்வு ஒலி நாடாவிற்கும் "இராக தீபம் " என்னும் பாரத நாட்டிய ஒலி நாடாவிற்கும் பாடல்களை எழுதியுள்ள இவர் ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடக மேடைகளில் நடித்துள்ளார் , கருத்தரங்க மேடைகள் , தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பங்கேற்றுள்ளார் . 

இலக்கிய சாதனையாளர் , நல் நூல் விருது போன்ற இன்னும் பல விருதுகள் பெற்ற இவரது படைப்புகளை ஆய்வு செய்து பல மாணவ மாணவிகள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது .  இவருடைய ஆய்வு கட்டுரைகளில் காமராஜர் விருது நகர் மக்களால் தோற்கடிக்க பட்டு பின்னர் குமரி மாவட்ட நாகர் கோயில் தொகுதி மக்களால் நாடாளுமன்றத்திற்கு அனுப்பியதை பற்றி "அப்பச்சி தேர்தல் " என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரை எழுதியுள்ளார் . இதே போன்று கிராமிய விளையாட்டுகள் , மண்ணும் கலையும், உடைந்து வரும் குடும்ப உறவுகள் என்பன போன்று ஏழு ஆய்வு கட்டுரைகள் எழுதியுள்ளார் .

தென்னொலி , யுகசக்தி , உதய தாரகை போன்ற இதழ்களில் துணை ஆசிரியராக இருக்கும் இவர் இதுவரை கவிதை , கட்டுரை, நாவல் என்று பதினொன்று புத்தகங்கள் எழுதியுள்ளார் . கொற்றிகோட்டின் சாதனையாளராகிய குமரி ஆதவன் அவர்கள் இலக்கிய பணியில் இன்னும் பல சாதனைகள் படைத்து தமிழுக்கு தொண்டாற்ற வேண்டும் என கொற்றிகோடு மக்களை சார்பாகவும் கொற்றிகோடு இணைய குழு சார்பாகவும் வாழ்த்துகிறோம் .

குமரி ஆதவன் நூல்கள் 

  1. ரத்தம் சிந்தும் தேசம் (கவிதை -1999)
  2. எரிதழல் கொண்டு வா ( கவிதை -2003)
  3. குருதியில் பூத்த மலர் ( வாழ்க்கை வரலாறு 2003 )
  4. அறிக பாசிசம் (வரலாற்று ஆய்வு நூல் 2003 )
  5. அருமை மகளே ( கவிதை 2005)
  6. குலை குலையா முந்திரிக்கா ஆய்வு நூல் (2007)
  7. ஆதவன் பதில்கள் (2008)
  8. பேரறிஞர்களுடன் (2010)
  9. ஒரு தமிழ் சிற்பியின் வாழ்க்கை பயணம் ( வாழ்க்கை வரலாறு 2010 )
  10. தெற்கில் விழுந்த விதை (தேவ சகாயம் பிள்ளை வாழ்க்கை வரலாறு 2010)
  11. என் கேள்விக்கென்ன பதில் (2010)


முகவரி 
10-113, செபஸ்டியான் இல்லம் 
குமாரபுரம் அஞ்சல் 
குமரி மாவட்டம் 
04651-289391, 9442303783


நன்றி : சிபி டேவிட்





11 comments:

Unknown said...

இதுவரை நமது ஊரின் படைப்பாளிகளின் படைப்புகள் நமது மாநிலத்தில் மட்டுமே அறியப்பட்டுள்ளது... இனிமேல் குமரி ஆதவன் போன்ற சாதனையாளர்களை உலகம் பார்கப்போகிறது ...... கொற்றிகோடு இணையத்தளம் ,,,,,,, இன்னும் பல சாதனை சிற்பிகளை உலகிற்கு அறிமுக படுத்த உள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன் ..... என்றும் அன்புடன் ஜே.டி.ஷிபிடேவிட்

Unknown said...

ஆதவன் அவர்களை நினைக்கும் போது நானும் இந்த மண்ணில் பிறந்தோம் என்பதை நினைத்து பெருமை கொள்கிறேன்

Kotticode said...

கட்டாயம் ஆதவன் அவர்களை அறிமுக படுத்துவதில் கொற்றிகோடு இணைய தளம் பெருமை அடைகிறது .

நன்றி சிபி

Suresh Kumar said...

வாழ்த்துக்கள் குமரி ஆதவன் அவர்களே நீங்கள் மேலும் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறோம்

ஆண்டனி said...

வாழ்த்துக்கள் சார்

Unknown said...

முதன்மையாக
இருப்பதல்ல வெற்றி
முன்னேறிக் கொண்டே
இருப்பதுதான் வெற்றி!;;;;
வாழ்த்துக்கள் ''''''''''''''''
எனது டியுசன் ஆசிரியர் அவர்களே

y jerin hilbert kuwait

காலப் பறவை said...

பகிர்வுக்கு நன்றி சுரேஷ்..

இவருடைய ஆய்வு கட்டுரைகள் இணையத்தில் கிடைக்குமா ?

Kotticode said...

@காலப் பறவை /////////


இணையத்தில் இதுவரை பதிவேற்றம் செய்யவில்லை என நினைக்கிறேன். அதற்கான பணிகள் நடந்து வருவதாக தெரிகிறது பணிகள் முடிந்த பின்னர் தகவல் தருகிறேன் நண்பரே

Anonymous said...

கொற்றிகோடு படைப்பாளி....ஒரு தமிழ் சிற்பி..! ஒரு இலக்கிய சாதனையாளர்..! ..தெற்கில் விழுந்த விதை மட்டுமல்ல..!நம்முடைய கொற்றிகோடு மண்ணையும் மக்களையும் நேசிக்கும் மகத்தான எழுத்துக்கு சொந்தக்காரரான நாஞ்சில்நாடனுக்கு(குமரி ஆதவன்) நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!!!.உங்கள் தமிழின் தாக்கம் உலக ஒட்டு மொத்த சாதனையாளர்கள் பலரையும் வியக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை..! உங்கள் பணி தொடரட்டும்..பாசமுடன் உங்களில் ஒருவன் கிசிங்கர் பால்ராஜ்,கொற்றிகோடு (குமரி மாவட்டம்) / சென்னை. தொடர்புக்கு +91 -9094651688.

ஜெறின் said...

குமரி ஆதவன் புகழ் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...


புதிய முயற்சியுடன் பதிவிட்ட கொற்றிகோடு இணைய பதிவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

தமிழ்த்தோட்டம் said...

இதுவரை நமது ஊரின் படைப்பாளிகளின் படைப்புகள் நமது மாநிலத்தில் மட்டுமே அறியப்பட்டுள்ளது... இனிமேல் குமரி ஆதவன் போன்ற சாதனையாளர்களை உலகம் பார்கப்போகிறது ...... கொற்றிகோடு இணையத்தளம் ,,,,,,, இன்னும் பல சாதனை சிற்பிகளை உலகிற்கு அறிமுக படுத்த உள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன் ..... என்றும் அன்புடன் தமிழ்த்தோட்டம்

Post a Comment

Updates Via E-Mail