Tuesday, December 28, 2010

பலத்த இழுபறிக்கு பின்னர் ஆலயம் கட்டி முடிக்க பட்டது

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டி தொழுகை நடத்தி வந்த ஆலயம் பெரிது படுத்த முயற்சித்த போது சில நபர்களால் ஏற்பட்ட இடையூறுகளால் வழக்கு நீதி மன்றம் சென்றது பின்னர் நீதிமன்றம் வாயிலாக உத்தரவு வாங்கி வந்த பின்னரும் சில நபர்கள் பிரச்சனையை பெரிது படுத்தி நீதிமன்ற உத்தரவை செயல் படுத்த விடாமல் தடுக்க முயற்சித்தனர். பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் இன்று காவல்துறையினரின் பாதுகாப்போடு கட்டி முடிக்க பட்டது.

 குமரி மாவட்டம் கல்குளம் தாலுகா கொற்றிகோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட குமாரபுரம் பகுதியில் எரிச்சமா மூட்டு விளை என்னும் இடத்தில் தான் இந்த ஆலயம் அமைந்துள்ளது . 40 ஆண்டு காலமாக செயல் பட்ட ஆலயத்தை சிலர் குமரி மாவட்டத்தில் நடைபெற்ற மதகலவரத்தையும் அதன் பின்னர் ஏற்படுத்திய ஆய்வு கமிசனையும் அவர்களுக்கு சாதகமாக்கி ஏற்கனவே நடைபெற்று வந்த ஆலயத்தை மாற்ற திட்டமிட்டு இத்தனை நாளும் தடுத்து நிறுத்தினர் . 

இப்போது கூட இந்த நீதி மன்ற உத்தரவு கிடைத்த பின்னரும் தடுக்க முயற்சி செய்தனர். முதலில் காவல் துறையினர் ஒத்துழைப்பு தராமல் இழுத்தடித்தே வந்தனர். மக்கள் ஓன்று பட்டு ஆலயம் கட்டியே தீர வேண்டும் என்ற முடிவில் உறுதியாக நின்று போராடிய பின்னர் மாவட்ட ஆட்சி தலைவர் காவல்துறை அதிகாரிகள் முன் நடந்த பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஒரு வழியாக பேச்சு வார்த்தை முடிந்து பின்னர் இன்று பலத்த காவல் துறை பாதுகாப்போடு மேற் கூரை கட்ட பட்டது. முதலில் காவல் துறையினர் அக்கறை காட்ட வில்லை என்றாலும் பின்னர் மிகுந்த ஒத்துழைப்பு தந்தனர். எந்த வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் சுமூகமான முறையில் கட்டி முடிக்க உதவிய காவல் துறை அதிகாரிகளுக்கும் , மாவட்ட நிர்வாகத்திற்கும் கொற்றிகோடு மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். 

மற்றும் பல ஆண்டுகளாக நடந்து வந்த பிரச்சனையில் ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுத்த கொற்றிகோடு சபை கமிட்டி அங்கத்தினர்கள் அனைவருக்கும் கொற்றிகோடு மக்கள் சார்பாக பாராட்டுக்கள் .

1 comments:

Unknown said...

நமது மக்களின் ஒற்றுமையை இந்த போராட்டத்தில் காண முடிந்தது ,......... அதே நேரம் நமது சபையில் அரசியல் விளையாட்டுகளையும் காண முடிந்தது இரு அவையும் ........

Post a Comment

Updates Via E-Mail