Thursday, December 23, 2010

கிறிஸ்து பிறப்பு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அன்பை இவ்வுலகிற்கு காண்பித்து இவ்வுலகில் மனிதனாக பிறந்து மனித வரலாற்றில் புதிய பகுதியை எழுதிய கிறிஸ்து இந்த உலகில் பிறந்த நாளை கிறிஸ்மஸ் பண்டிகையாக ஆண்டு தோறும டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது .

ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்ற ஒரு வாழ்க்கை முறையை தன்னுடைய போதனை மூலம் மக்களுக்கு எடுத்துரைத்து அதை தன் வாழ்க்கையிலும் வாழ்ந்து காட்டியவர். மண்ணில் சமாதானமும் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவ பாடுபட்டவர். மனிதர்களின் பாவங்களுக்காக தன்னையே அற்பனித்தார் இயேசு.   

கிறிஸ்தவர்கள் கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் விதமாக புத்தாடைகள் உடுத்தி காலையில் ஆலயம் சென்று வழிபடுவார்கள் . எளிமையாக மாட்டு தொழுவத்தில் கிறிஸ்து பிறந்து மனிதர்களுக்குள் எளிமையை போதித்தார் . ஆலயங்கள் வியாபார இடங்களாக மாறுவதை கண்டு மனம் கொதித்து பொருட்களை அடித்து நொறுக்கி மத வியாபாரிகளை வெள்ளையடிக்க பட்ட கல்லறைக்கு ஒப்பிட்டார். தன்னை போல் பிறரையும் நேசி என்று அனைவரையும் சகோதரர்களாக நினைக்கும் ஒரு மன பக்குவத்தை மனித குலத்திற்கு காட்டினார் . ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்று எதிரியே மனம் திரும்பும் ஒரு சகிப்பு தன்மையை இந்த உலகிற்கு காண்பித்தார் . 

ஊரிலிருந்து ஒதுக்கி வைக்க பட்ட சமாரிய பெண்ணிடம் தண்ணீர் வாங்கி குடித்து ஒரு சமுதாய புரட்சி ஏற்படுத்தி அதன் மூலம் ஒடுக்க பட்ட மக்களையும் அரவணைத்து கொண்டார் .  மண்ணில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற ஏற்ற தாழ்வற்ற நிலை உருவாக வேண்டும் என நினைத்தார் . தவறு செய்தவர்கள் திருந்தி வாழ வேண்டும் என்று மன்னிப்பை இந்த உலகிற்கு அறிமுகம் செய்தார் . ஆனால் இன்றோ மன்னிப்பு இருக்கிறது என்று தெரிந்தே தவறு செய்பவர்கள் தான் அதிகமாக் இருக்கின்றனர் . 

தன்னுடைய போதனைகள் மூலமும் தன் வாழ்க்கையின் மூலமும் மனித குலத்திற்கு பேருதவி செய்த இயேசுவின் பெயரால் கிறிஸ்தவர்களாக இருக்கும் நாம் இந்த கிறிஸ்து பிறப்பு கொண்டாடும் முன் நாம் உண்மையாகவே கிறிஸ்தவத்தை பின்பற்றுகிறோமா இல்லை கடமைக்கு வேதாகமம் படிப்பது ஜெபிப்பது போல் நம் வாழ்க்கையையும் கடமைக்காக வாழ்கிறோமா ? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும் . சுயநலத்திற்காக கிறிஸ்துவை நோக்கி ஜெபிக்கும் மக்கள் தான் இன்று ஏராளம். கிறிஸ்தவம் என்பது ஒரு சேவை இயக்கம் உலகில் சமதர்மம் ஏற்பட வேண்டும் என்பதுது தான் கிறிஸ்தவத்தின் நோக்கம் . கிறிஸ்து பிறந்து இரண்டாயிரம் ஆண்டுகளை தாண்டிய பின்னரும் உலகில் சமதர்மம் ஏற்பட வில்லை , மாறாக அனாதை இல்லங்கள் , முதியோர் இல்லங்கள் , கைவிடப்பட்ட மக்களாக தான் இன்றும் பலர் வாழ்ந்து வருகின்றனர் . மனிதாபிமானம் இல்லாத ஒரு உலகமாக இந்த உலகம் மாறி வருகிறது. மனித உயிர்களுக்கு விலை மதிப்பற்று வாழ்ந்து வருகிறோம் .   

அநீதி அக்கிரமங்களுக்கு எதிராக குரல் கொடுத்தார் இயேசு ஆனால் இன்றோ அநீதி அக்கிரமங்களுக்கு எதிராக குரல் கொடுப்பதை விட்டு அநீதிக்கு எதிராக ஜெபித்து தங்கள் கடமையிலிருந்து விலகும் கிறிஸ்தவர்களே ஏராளம் . உண்மையான கிறிஸ்தவம் பற்றிய அறிவு கிறிஸ்தவர்கள் மத்தியில் மழுங்கி வெறுமனே அற்புதங்கள் நடக்காதா என்ற சுயநல போக்கே முன்னோக்கி நிற்கிறது . இந்த நிலை மாற வேண்டும் இயேசு கண்ட உலகம் உருவாக வேண்டும் சுயநலமற்ற , சமதர்ம , மனிதாபிமான உலகம் உருவாக கிறிஸ்து பிறப்பு நாளில் உறுதி ஏற்று செயல் பட வேண்டும் . 

மீண்டும் இயேசு இந்த மண்ணில் வரும் போது நியாய தீர்ப்பு நடைபெறும் அப்போது ஒரு சாரார் வலது பக்கத்தில் இருப்பார்கள் ஒரு சாரார் இடது பக்கத்தில் இருப்பார்கள். இடது பக்கத்தில் இருப்பவர்களை பார்த்து சபிக்க பட்டவர்களே அக்கினி சூழ்ந்த நரகத்திற்கு நீங்கள் தள்ள படுவீர்கள் என்பார். பின்னர் அவர்களை பார்த்து நான் இயேசு சொல்வார் நான் நோய்வாய் பட்டிருந்தேன் என்னை நீ பார்க்க வரவில்லை , நான் ஜெயிலில் இருந்தேன் என்னை நீ பார்க்க வரவில்லை , நான் பிச்சைகாரனாக வந்தேன் எனக்கு பிச்சை போட வில்லை என்பார். அப்போது வலது பக்கத்தில் இருப்பவர்கள் கேட்பார்கள் இதெல்லாம் எப்போது நடந்தது என்று கேட்கும் போது இயேசு சொல்வார் எந்த ஒரு எளியவனுக்கு நீ இதையெல்லாம் செய்தாயோ அதை நீ எனக்கே செய்தாய் என்பார் .............................


ஆனால் இன்று நாம் மனிதாபிமனமற்றவர்களாக பரலோகத்திற்கு போவதற்காக
வெறுமனே ஜெபித்து கொண்டிருக்கிறோம் ......... சிந்திப்போம் இந்த நாளில்.

 அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு புத்தாண்டு நல வாழ்த்துக்கள் வரும் ஆண்டு கிறிஸ்து விரும்பிய ஆண்டாக அமைய வாழ்த்துவோம் புத்தாண்டை வரவேற்போம் . 

3 comments:

Suresh Kumar said...

அனைவருக்கும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ................

Happy Xmas & Happy New year

Unknown said...

சரியாக சொன்னீர்கள் .இயேசு ஒரி கம்யூனிஸ்ட் சிந்தனை யை நமக்கு அருளி உள்ளார் ............. ஆனால் இன்று (சமதர்மம்)கம்யுனிசத்தை ம் மதிப்பதில்லை இயேசு வையும் மதிப்பதில்லை .......................

Kotticode said...

நண்பரே இயேசு சிந்தனைகளை தான் வேறு வடிவத்தில் கம்யூனிஸ்ட் சிந்தனையாக வந்தது ஆனால் இன்று அந்த சிந்தனைகள் கம்யூனிஸ்ட் பக்கமும் பக்க சார்பற்ற சிந்தனையாக இல்லையே .............. மனிதாபிமானம் பக்க சார்பற்று இருக்க வேண்டும் . அது தான் எந்தவொரு சிந்தனையையும் முழுமை பெற வைக்கும்.

Post a Comment

Updates Via E-Mail