Friday, December 17, 2010

குமரி மாவட்டத்தில் பெருகி வரும் வரதட்சனைகள்

குமரி மாவட்டம் தமிழகத்திலேயே கல்வியறிவு அதிகமான மாவட்டமாக திகழ்ந்து வருகிறது . இங்கு கிறிஸ்தவர்கள் அதிகமாக காணப்படுகிறார்கள்.  அதே போல் தமிழகத்திலேயே அதிகமாக வரதட்சணை கொடுக்கும் மாவட்டமும் இந்த குமரி மாவட்டம் தான். இங்கு வரதட்சணையினால் அதிகம் பெண்கள் பாதிக்க படுகின்றனர். திருமணத்திற்காக வட்டிக்கு பணம் வாங்கி பின்னர் அதை திருப்பி செலுத்த முடியாமல் அவதி படும் மக்கள் ஏராளம் .    ஒரு காலத்தில் பல லட்சங்களாக இருந்த வரதட்சணைகள் இன்று கோடிகளாக ஆகி விட்டது .


மருத்துவம் படிப்பு படித்த மாப்பிள்ளை பார்க்க வேண்டுமென்றால் கோடிகள் கொடுக்க வேண்டும் . வரதட்சணை வாங்க வேண்டும் என்ற மனநிலை இந்த மாவட்டத்தில் பெரும்பால்னான பெற்றோர்கள் மத்தியில் காணப்படுகிறது. குறிப்பாக தங்கள் மகளுக்கு திருமணம் என்றால் குறைந்த தொகையில் மாப்பிள்ளை பார்ப்பதும் , மகனுக்கு என்றால் அதிக தொகையில் மாப்பிள்ளை பார்ப்பது என்ற நடை முறையை பெரும்பாலானோர் பின்பற்றி வருகின்றனர்.  

வரதட்சணை புகார் சம்மந்தமான பல வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன . பல பெற்றோர்கள் வரதட்சணையால் தங்கள் மகள் பாதிக்க படுகிறாலே என்ற எண்ணம் இல்லாமல் மகனுக்கு அதிக வரதட்சணை பேசுபவர்களாக இருக்கின்றனர். திருமணத்தின் மூலம் ஒரு ஆண் பயனடைகிறார்களா இல்லை பெண் பயனடைகிறார்களா  என்ற விவாதங்கள் தேவையற்றது ஆனால் ஒரு பெண்ணை ஒரு ஆண் திருமணம் செய்யும் போது அதற்கு தாலி தேவை படுகிறது. உண்மையில் அந்த ஆண் தான் பெண்ணை திருமணம் செய்கிறான் , அந்த ஆண் பெண்ணை தன் மனைவியாக்கி கொள்கிறான் . மாப்பிள்ளை தான் தாலி எப்படி தன் வருங்கால மனைவிக்கு அமைய வேண்டும் என்பதை முடிவு செய்கிறான். வருங்கால மனைவி திருமணத்தின் போது அந்த உடை உடுக்க வேண்டும் என ஆண் தான் தீர்மானிக்கிறான். 

இப்படி திருமணத்தின் போது உடை முதல் செருப்பு  வரை ஆண் தான் திருமணம் செய்ய போகும் பெண்ணுக்கு கொண்டு செல்கிறான். திருமணம் முடித்த பின்னர் அந்த பெண் அவனுக்கு உரிமை ஆகிறாள் சொந்தம் ஆகிறாள். அந்த பெண்ணை வாழ் நாள் முழுவதும் வாழ வைக்க வேண்டியது ஆணின் கடமை ஆகிறது. 

ஆனால் இன்றைய சமூகத்தில் எல்லாம் தலைகீழாக நடக்கிறது . திருமணத்திற்கு தேவையான தாலி, உடை ,செருப்பு இவை அனைத்தையும் மாப்பிள்ளை தான் கொண்டு செல்கிறான் ஆனால் அதை வாங்கிய காசு அனைத்தும் அவனுடையது அல்ல . பெண் வீட்டில் வரதட்சணையாக கொடுக்க பட்ட பணத்தில் தான் இவை அனைத்தையும் மாப்பிள்ளை வாங்கி சென்று அந்த பெண்ணை மனைவி ஆக்கி கொள்கின்றான். 

இப்படி பெண் வீட்டாரிடமிருந்து வாங்க பட்ட பணத்தில் கட்டிய தாலி எப்படி அந்த ஆணுக்கு சொந்தமாகும். ஆனால் பெண்கள் மத்தியிலும் இது சம்மந்தமான விழிப்புணர்வுகள் ஏற்படவில்லை. அவர்களும் எண் கணவர் கட்டிய தாலி , கணவர் கொண்டு வந்த சேலை என்றே எண்ணுகின்றனர். இது மட்டுமல்லாது திருமண செலவுக்கும் சேர்த்தே பெண் வீட்டிலிருந்து பணம் கொடுக்க படுகிறது.  

 காலம் காலமாக இதே நடை முறை தான் நடந்து வருகிறது அது இப்போது விபரீதங்களில் வந்து நிற்கிறது. பெரும்பாலும் கிறிஸ்தவ சமூகத்தில் தான் வரதட்சணை பணத்தின் மதிப்பு உயர்ந்து காணப்படுகிறது.  திருமணத்திற்காக ஒரு ஆணின் உழைப்பு என்பது அறவே இல்லாமல் ஆகி விட்டது . அனால் குமரி மாவட்டத்தில் இருக்கும் இந்த பழக்கம் கிறிஸ்தவ சாமூகத்தில் இருந்து தோன்றியதல்ல தமிழகம் முழுவதும் ஆணாதிக்கம் உருவான நேரத்திலிருந்து ஏற்பட்ட பழக்கம் இப்போது கிறிஸ்தவ சமூகத்தில் வேரூன்றி நிற்கிறது . இதை பற்றி பெற்றோர்கள் சிந்திப்பதில்லை மகளுக்கு 5  லட்சம் வரதட்சணை கொடுத்தால் மகனுக்கு 10  லட்சம் வாங்கி விடலாம் என்ற தைரியம் . 

இந்த வரதட்சணையின் விளைவாக பெண்களுக்கு தங்கள் படிப்பிற்கு ஏற்ற ஆணை திருமணம் செய்து வைக்க முடியாமல் பல பெற்றோர்கள் தவிக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டுமானால் இனி வரும் ஆண் சமுதாயம் பெண்ணுக்கு தாலி கட்டுவது என் செலவில் தான் கட்டுவேன் என்ற உறுதி எடுத்தி இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டால் மட்டுமே இந்த வரதட்சணைகள் குறையும் . இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் சகோதரிகளை திருமணம் செய்து கொடுத்த கடனை இன்னும் திருப்பி அடைக்க முடியாமல் வயது தாண்டியும் திருமணம் செய்யாமல் இருக்கும் ஆண்கள் இங்கே ஏராளம் இருக்கின்றனர் அல்லது வயதான தாய் தந்தைகளிடம் கடன்களை விட்டு விட்டு அவர்களை பிரிந்த ஆண்களும் ஏராளம் . 


ஆண்களே வெட்கமில்லாமல் பெண்ணிடமே பணம் வாங்கி அந்த பணத்தில் பெண்ணுக்கு தாலி வாங்காதீர்கள. அதற்கு பதிலாக அவர்களிடமே தாலியை வாங்கி அவர்களையே கட்டவும் செய்யலாமே .............      சிந்தியுங்கள் ......

16 comments:

Unknown said...

தங்கள் ஆதங்கத்தை நான் மனபூர்வமாக ஏற்று கொள்கிறேன்....... இந்த வரதட்சணை கொடுமையில் தங்கள் குறிப்பிட்ட அனைத்து உதாரணங்களும் நமது ஊரில் உள்ள உண்மையை என்பதை நான் நினைவு கூற விரும்புகிறேன் ....... இனி வரும் தலை முறை யாவது....... இந்த அடிமை விலங்கை அறுத்து எறிய வேண்டும் ... இல்லை எனில் இந்த நாடு இல்லை நமது ஸ்வர்கபூமி கொற்றிகோடும்......பருவ பெண்களின் தற்கொலை பூமியாகிவிடும்.. என்பதில் சந்தேகம் இல்லை

Suresh Kumar said...

சரி தான் நண்பா. ஒவ்வெரு வீட்டிலும் ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் படும் பாடு சொல்லி முடியாது. இந்த வரதட்சணை பெறும் முறை மாற வேண்டும் . இதற்கு நாம் அயராது உழைக்க வேண்டும் .

sivakumar said...

வருத்தமாக இருக்கிறது. இதற்கு என்னதான் முடிவு ?

Suresh Kumar said...

நண்பரே இது வருத்த படுவது மட்டுமல்ல வேட்க பட வேண்டியது . ஒரு கல்வியறிவு கூடிய மாவட்டத்தில் இப்படி நடக்கிறது என்றால் நாம் அனைவரும் வேட்க பட வேண்டும் .

Unknown said...

இதற்கு உழைப்பதை விட உறுதிமொழி எடுப்பது நலம் என கருதுகிறேன்

Kotticode said...

shibi said...
இதற்கு உழைப்பதை விட உறுதிமொழி எடுப்பது நலம் என கருதுகிறேன்//////////////////////

ஒவ்வெரு இளைஞர்களும் தன் பணத்தில தான் தாலி கட்டுவேன் என்ற உறுதி எடுத்தாலே போதும்.

ஜெறின் said...

வீட்டுக்கு வர லக்ஷ்மியை யாராவது வேண்டாம்னு சொல்வாங்களா?

முதல்ல கொடுக்கிறவங்க நிறுத்தினால் தான் பணம் வாங்குபவர்கள் நிறுத்துவார்கள்...

Suresh Kumar said...

ஜெரின் said...

வீட்டுக்கு வர லக்ஷ்மியை யாராவது வேண்டாம்னு சொல்வாங்களா?

முதல்ல கொடுக்கிறவங்க நிறுத்தினால் தான் பணம் வாங்குபவர்கள் நிறுத்துவார்கள்...
/////////////////////////////

வீட்டுக்கு லட்சுமி வர வேண்டியது தான் , வரவேற்க வேண்டியது தான். ஆனால் அந்த லட்சுமி கொண்டு வருவதற்கு அவர்கள் படும் கட்டங்களையும் நினைத்து பார்க்க வேண்டும் . கொடுக்கிறவங்க அப்படியாவது என் மகள் நல்ல வாழ்ந்த போதும்னு நினைக்கிறாங்க . நாம் வாங்க மாட்டோம்னு உறுதி எடுத்தால் கொடுக்கிறவங்க சந்தோசமா பொண்ணை அனுப்பி வைப்பாங்க தானே .

ஜெறின் said...

இப்போது பாகத்து வீடு காரர் தன் மகளை 10 லட்சத்துக்கு திருமணம் செய்து கொடுத்தார் என்றால்,தான் 20 லட்சத்துக்கு கொடுக்க வேண்டும் என்று தான் இந்த கால கட்டத்தில் செய்து வருகிறார்கள்.

அவர்கள் எதற்காக தோப்பு துரவுகளை விற்று இவ்வளவு ஆடம்பரம் செய்ய வேண்டும்?


கொடுக்கிறவர்கள் இப்போது கவுரவத்திற்காக மட்டுமே கொடுகிறார்கள்,அது அல்லாமல்,நன்றாக வாழ்கை அமைய வேண்டும் என்பதற்காக மட்டும் அல்ல.


அப்படி கவுரவத்திற்காக கொடுக்குக்கும் பணத்தை நாம் எதற்காக வேண்டாம் என்று சொல்கிறோம்?

தேவன் மாயம் said...

மிகவும் வருத்தம் தரும் விசயம்!

Unknown said...

வாழ்க்கை உங்களுக்கு பல அனுபவங்களை கொடுத்துள்ளது.

வலிகளயும் சேர்த்துதான்

Suresh Kumar said...

ஜெரின் said...

இப்போது பாகத்து வீடு காரர் தன் மகளை 10 லட்சத்துக்கு திருமணம் செய்து கொடுத்தார் என்றால்,தான் 20 லட்சத்துக்கு கொடுக்க வேண்டும் என்று தான் இந்த கால கட்டத்தில் செய்து வருகிறார்கள்.

அவர்கள் எதற்காக தோப்பு துரவுகளை விற்று இவ்வளவு ஆடம்பரம் செய்ய வேண்டும்?


கொடுக்கிறவர்கள் இப்போது கவுரவத்திற்காக மட்டுமே கொடுகிறார்கள்,அது அல்லாமல்,நன்றாக வாழ்கை அமைய வேண்டும் என்பதற்காக மட்டும் அல்ல.


அப்படி கவுரவத்திற்காக கொடுக்குக்கும் பணத்தை நாம் எதற்காக வேண்டாம் என்று சொல்கிறோம்?
//////////////////////////////


கவுரவம் கூட ஒரு காரணம் தான். அனால் கவுரவம் மட்டும் காரணம் இல்லை . வாங்குகிறவர்கள் கூட கவுரவத்திற்காக வாங்குகிறார்கள் அல்லவா ? இப்படி இரண்டு பக்கமும் சிலர் இருக்கிறார்கள் . ஊரார் வாய் இருக்கே அத போல மோசமான வாய் வேற ஒன்றுமில்லை . தாலியை தூக்கி எடை போடுவது பெண் எத்தனை பவுன நகை போட்டிருக்கிறாள் என பார்ப்பது இப்படி பல மனிதர்கள் ஊராருக்காவே வாழுகிறார்கள் .

ஊராருக்காக தமக்குள்ளே ஒரு போலியான கவுரவத்தை கொண்டு இருக்கிறார்கள் அது உண்மை தான் . இந்த போலியான கவுரவங்கள் மாற வேண்டும் அப்போது தான் இதற்கு முழு விடுதலை கிடைக்கும் .

Suresh Kumar said...

jerin said...

வாழ்க்கை உங்களுக்கு பல அனுபவங்களை கொடுத்துள்ளது.

வலிகளயும் சேர்த்துதான்
/////////////////////////

வலிகள் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையாகவே அமையாது நண்பா . வலிகளை அனுபவிக்க தெரிய வேண்டும் . அப்போது தான் வலிகள் சுகமாக அமையும் .

sivakumar said...

//ஊராருக்காக தமக்குள்ளே ஒரு போலியான கவுரவத்தை கொண்டு இருக்கிறார்கள்// இதுதான் மூல காரணம்.அடுத்தவனை நம் பெருமை பேச வைப்பதற்கே இத்தனை சிரம்ப்படுகிறார்கள். வேண்டாமென்றால் மாப்பிள்ளைக்கு ஏதோ குறையென்று கிசுகிசு பரப்பிவிடுகிறார்கள். திருப்பூர் மாவட்டத் திருமணத்திலெல்லாம் மாப்பிள்ளைக்கு சீதனமாகக் கொடுக்கும் car ஐ திருமண மண்டபத்திலேயே கொண்டு வந்து நிறுத்தி வரவேற்பு நிகழ்வில் வைத்து படம் காட்டுகிறார்கள். என்ன செய்ய?

கொடுப்பதால் வாங்குகிறோம், கேட்பதால் கொடுக்கிறோம் என்கிறார்கள். கல்லூரி படிக்கும்போதே அதற்கு குறிவைத்துவிடுகிறார்கள், எனக்குத் தெரிந்த குமரி மாவட்டத்து நண்பனொருவன் அதற்கு வேண்டியே அஞச்லில் படித்துவருகிறான்.

Suresh Kumar said...

@தமிழ் வினை ///////////////

இதே நிலை தான் எல்லா இடங்களிலும் நடக்கிறது எப்போது கவுரவத்திற்கு வாழ்வதை நிறுத்துகிரானோ அப்போது தான் இதற்கு விடியல் வரும் . இதனால் அதிக வரதட்சணை கொடுக்க முடியாமல் எத்தனையோ பெண்கள் படிக்கும் போது இருந்த லட்சியங்கள் கனவுகள் எல்லாம் கனவாகி வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாமல் போனவர்கள் இருக்கிறார்கள் .

குமரி மாவட்டத்தில் வரதட்சணை வழக்குகள் இன்று அதிகமாக நடைபெறுகிறது என்பது மிகவும் வருத்தமான செய்தி .

Anonymous said...

குமரிக்கு கிடைத்தது வரதட்சணை மாவட்டம் என்ற கவுரவம்..!இன்னும் எத்தனை காலம்தான் இந்த கவுரவம்...! கவுரவம் வேண்டாமே! நம் வாழ்க்கையை நமக்காகத்தான் வாழ வேண்டும்.பிறர் பார்க்க, அடுத்தவர் நினைக்க, மற்றவர் மதிப்பு வேண்டும் என்று வாழ ஆரம்பித்தால் நம் நிலைமை என்னவாய் இருக்கும் ...!படிப்பறிவும் தேவை..!பணமும் தேவை..!வரதட்சணை கவுரவம் வேண்டாமே..!இனியாவது படித்தவர்கள் திருந்துங்கள்...நம் குமரிகள் வாழத்தான் வாழ்க்கை...!!!!வரதட்சணைக்கல்ல...!- பாசமுடன் உங்களில் ஒருவன் கிசிங்கர் பால்ராஜ்,கொற்றிகோடு (குமரி மாவட்டம்) / சென்னை.

Post a Comment

Updates Via E-Mail