Thursday, December 9, 2010

"குமரிக்கு நடந்தது சோதனையா...?அல்லது வேதனையா..?


மழை கொட்டோ
கொட்டோவெனக் கொட்டி
தீர்த்துக்கொள்ள
நினைத்துப் பார்க்க முடியாத
வண்ணம் நனைந்து விட்டாள்..குமரி..
நம் குமரி..!

சுனாமியால் பாதிக்கப்பட்டது போதாதா...!
மீண்டும் (சுனாமி)மழையின்
காரணமாக
நம் குமரி கதி கலங்கிப் போய் நிற்கிறாள்..!
இயற்கையின் கோபத்திற்கு
நம் குமரியும் தப்பவில்லை...!
குமரிக்கு இனியாவது
பாசம் காட்டுமா இயற்கை...!
விழித்துக் கொள்வோம்..!

பாசமுடன் உங்களில் ஒருவன் கிசிங்கர் பால்ராஜ்,கொற்றிகோடு (குமரி மாவட்டம்) / சென்னை. தொடர்புக்கு +91 - 9094651688

21 comments:

Unknown said...

விழித்துக்கொண்டதால் தான் உயிர் பிழைத்தோம் நண்பனே.....

KISINGER PAULRAJ said...

விழித்துக்கொண்டதால் தான் உயிர் பிழைத்தோம் என்றல்ல... ..இயற்கை நம்மை விட்டு வைத்து உள்ளது நண்பா!...உங்கள் விமர்சனத்திற்கு நன்றி..!.நட்புடன் கிசிங்கர் பால்ராஜ்,கொற்றிகோடு (குமரி மாவட்டம்) / சென்னை.

Suresh Kumar said...

குமரிக்கு வந்த சோதனையை அருமையான வரிகளால் வர்ணித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் . இயற்கை எப்போதும் ஒரே போல் இருப்பதில்லை. இயற்கை மாற்றங்கள் ஏற்படும் போது அழிவுகள், பாதிப்புகள் ஏற்பட தான் செய்யும் . பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகள் ஏற்பட்டு இயற்கை அழிவுகளிலிருந்து நாம் எப்படி நம்மை காப்பாற்றி கொள்வது என்ற முன்னடவடிக்கைகளை மக்கள் மற்றும் அரசாங்கம் முன்னெடுத்து செயல் பட்டால் ஓரளவிற்கு அழிவிலிருந்து தப்ப முடியும் . குறிப்பாக தாழ்வான பகுதிகளில் வீடு கட்ட கூடாது என விதிகள் இருக்கிறது ஆனால் அதை யாரும் பின்பற்றுவதில்லை ......... இந்த மாதிரியான இயற்கை அழிவுகளிலிருந்து எப்படி நம்மை காப்பது சம்மந்தமான விவாதங்கள் முன்னெடுப்பதன் மூலம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தலாம் .நன்றி

Unknown said...

தாழ்வான பகுதிகளே இல்லாமல் வாழும் மக்கள் எத்தனையோ நண்பரே

KISINGER PAULRAJ said...

இயற்கைக்கு எதிராக "குமரி" என்ன... ஒரு நாள் தாழ்வான பகுதியை நோக்கி "உலகமே" போய் தான் ஆகவேண்டும் நண்பனே..!--நட்புடன் கிசிங்கர் பால்ராஜ்,கொற்றிகோடு (குமரி மாவட்டம்) / சென்னை.

Suresh Kumar said...

நாம் நம்மை பாதுகாக்கும் விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட்டால் ஓரளவிற்கு இழப்பை குறைக்கலாம் . என்றோ ஒரு நாள் தாழ்வான பகுதிக்கு செல்லும் உலகத்திற்காக இப்போதே நம்மை பலி கொடுப்பது நியாயமில்லை தானே .

Unknown said...

பார்த்து பழகும் காலம் பருவக்காலம்...
பல்லாயிரம் இளஞர்கள் வாழ்கை அமையும் காலம்..
பட்டு போகும் காதலில் நம்மை பரவசம் அடையும் காலம்..
பருவ பெண் கண் பார்வையால் நம்மை
பாடாய் படுத்தும் காலம் பார்த்து பழகுங்கள் .
இல்லையேல் வீணா போகும் உங்கள் ஆயுட்காலம்.

Unknown said...

காதலில் உறைந்த காதல் கிறுக்கா..பருவ பெண்ணைப் பார்த்து ரசிக்க வேண்டிய நேரம் இல்லை இது........ நமது பருவத்தின் நமது ஊரின் பேரழிவு.. இது.... பெண்ணிடம் உருகுவதை விட்டுவிட்டு... கடவுளிடம் உருகு வரும் காலம் ஆவது..... சிறப்பாக அமைய..........

Unknown said...

மழையை ரசிக்கத் தெரியாதவனுக்குக் காதலையும் ரசிக்கத் தெரியாது. மழையே வராமல் கிடக்கும் நிலத்தின் வெடிப்பு. மாலை நேரத்து மெல்லிய சாரல். வெயிலோடு சேர்ந்து பொழியும் மழை. உலகத்தையே சுத்தப்படுத்தும் உன்னத மழை. மழை நின்றும் விடாத தூவானம். மழை முடிந்து வீசும் மண் வாசம். காற்று, புயல், சூறாவளியில் சிக்கினாலும் விடாது பொழியும் மழை. பெருமழையில் அடித்து செல்லப்பட்ட வீடு. மழையின் இத்தனைப் பரிமாணங்களும் காதலிலும் உண்டு. மழையிலும் சரி, காதலிலும் சரி நனையும் வரை நஷ்டமில்லை.நனையாவிட்டால் ஒரு லாபமுமில்லை. எல்லாம் உன்னிடம் சொல்ல வேண்டும், வருவாயா?
மழையில் குடை…
குடைக்குள் நாம்…
நமக்குள் மழை!
காதலிலும் மழையிலும்
நனையும் வரை சந்தோஷம்... பிற்பாடு தான் ஜலதோஷம்...
jerin hilbert kuwait

ஜெறின் said...

"மழையை ரசிக்கத் தெரியாதவனுக்குக் காதலையும் ரசிக்கத் தெரியாது"
என்பது உண்மை தான்.\


ஆனால்,


உயிர் கொடுக்க வந்த காதல் இல்லை இது,

உயிர் எடுக்க வந்த காதல்...

காப்பாற்ற வந்த காதல் இல்லை இது,

கழுத்தறுக்க வந்த காதல்...



நனைந்த பின் ஜலதோஷம்....

என்று தெரிந்த பின்னும்,

எதற்காக அந்த சந்தோசத்தை அனுபவிக்க வேண்டும்.

ஜெறின் said...

என்னுடைய வலைபதிவை,கொட்டிகோடு வலைபதிவில் அறிமுக படுத்தியதற்கு நன்றி சுரேஷ் அண்ணா....
www.jerin.co.in

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

Hi Jerin... Thanks for the nice comment....

Anonymous said...

மழையை ரசிக்க முடிகிறது...மண்ணால்..!
மலையை ரசிக்க முடிகிறது...கண்ணால்..!
கலையை ரசிக்க முடிகிறது...உன்னால்....!-ஆனால்
தொலைந்து போன குமரியின் பேரிழப்பை
உன்னால் ரசிக்க முடிகிறதா..!!!மனம் வலிக்கிறது....வருந்துகிறேன்.கிசிங்கர் பால்ராஜ்,கொற்றிகோடு (குமரி மாவட்டம்) / சென்னை.

Unknown said...

இது தேவதையின் பரிசு
யாரும் திரும்பிக்கொள்ள வேண்டாம்...
நெடுஞ்சாலையிலே நனைய
ஒருவர் சம்மதமும் வேண்டாம்
அந்த மேகம் சுரந்த பாலில்
ஏன் நனைய மறுக்கிறாய்
நீ வாழ வந்த வாழ்வில்
ஒரு பகுதி இழக்கிறாய்

Unknown said...

ஆமாம் இது தேவதையின் பரிசுதான்..... உண்ண உணவும், உடுக்க உடையும் இல்லாமல் விடுதிகளிலும் பள்ளிகூடங்களிலும் பிச்சைகாரர்கள் போல் நம் மக்கள் வாழ்கிறார்களே... இது நிச்சயமாக தேவதையின் பரிசுதான் நண்பா..... கவிதை அருமை கில்பர்ட் நண்பரே...........

ஜெறின் said...

ஜெரின் கில்பர்ட் அவர்களே,

உங்களுடைய தேவதை தந்த பரிசு என்ன தெரியுமா?

மர்ம காய்ச்சல்...


குமரியை தாக்கிய இந்த மர்ம காய்ச்சலுக்கு,

காரணம் மழை என்று சொல்லுகிறார்களே,

அவர்களும் மழையை ரசிக்க தெரியாதவர்களா,

இல்லை,

காய்ச்சலினால் பாதிக்க பட்டார்களே,

அந்த மக்களும் மழையை ரசிக்க தெரியாதவர்களா?



உங்களுடைய கவிதை பதிலை விட்டு,

உண்மையை சிந்தித்து எழுதுங்கள்...

Suresh Kumar said...

என்னையா இங்க நடக்குது இயற்கை அழிவிலிருந்து மக்களை எப்படி காப்பது என்ற விவாதம் தொடரும் என்று பார்த்தால் காதல் கத்தரிக்கா ரேஞ்சுக்கு போயிட்டிருக்கு . முறையான விவாதங்கள் எதுவுமே பலன் தராது. எனவே விவாதத்தை ஆரோக்கியமாக தொடருவோம் .

Unknown said...

இல்லை நண்பா இயற்கை அழிவு என்பது மாற்ற முடியாத ஒன்றுதான் ஆனால்.... அரசியல் வாதிகள் போல் அரசியல் செய்யாமல் அனுதாபத்தை யாவது தெரிவிக்கலாமே.... நான் நிலைமையை கண்கூடாக பார்த்தால் தான் இந்த ஆதங்கம்

Suresh Kumar said...

குமரி மாவட்டம் இரண்டு தசாப்தங்களுக்கு பிறக்கு மழையால் பிக பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது . வீடிழந்தோர் ஏராளம் , உணவு இன்றி தவிப்போர் ஏராளம் இதற்க்கு மத்தியில் இந்த மழையால் ஏற்பட்ட சுற்று புற சீர்கேட்டாலும் பருவ மாற்றத்தாலும் பல தோற்று நோய்கள பரவி கொண்டிருக்கிறது . அரசு உடனடியாக போர் கால நடவடிக்கைகள் எடுத்து முதலில் தோற்று நோய் பரவாமல் தடுக்க வேண்டும் . உணவு உடை இன்றி தவிப்போருக்கு தகுந்த உதவிகள் கொடுக்க பட வேண்டும் . வீடிழந்து தவிப்போருக்கு நிரந்தர வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் .

Suresh Kumar said...

shibi said...

இல்லை நண்பா இயற்கை அழிவு என்பது மாற்ற முடியாத ஒன்றுதான் ஆனால்.... அரசியல் வாதிகள் போல் அரசியல் செய்யாமல் அனுதாபத்தை யாவது தெரிவிக்கலாமே.... நான் நிலைமையை கண்கூடாக பார்த்தால் தான் இந்த ஆதங்கம்
//////////////////////////


உண்மை தான் இயற்கை அழிவை மாற்ற முடியாது . முன் நடவடிக்கைகள் மூலம் சிறிதளவு தற்காத்து கொள்ளலாம் . இன்று கட்டிட விதிகளை பார்க்கும் போது இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுக்காக்க கூடிய சட்டங்கள் இருக்கிறது . ஆனால் அதை யாரும் பின்பற்றுவதில்லை . வரைபட அனுமதி கொடுக்கும் நிர்வாகமும் சரியாக அவற்றை பார்ப்பதில்லை .

Post a Comment

Updates Via E-Mail