Wednesday, December 8, 2010

குமரி மாவட்டத்தில் கடும் மழை பொதுமக்கள் பெரும் அவதி

குமரி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவிற்கு மிக பெரிய அளவிற்கு மழை பெய்து கொண்டிருக்கிறது . கடந்த பல ஆண்டுகளுக்கு  பிறகு  இந்த மழை மிக பெரிய அளவில் இருக்கிறது . பொதுமக்களின் வீடுகள் நிலங்கள் உடைமைகள் அனைத்தும் வெள்ளத்தால் அடித்து சென்றுள்ளன . சொந்த இடங்களை விட்டு மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றார்கள் . 
மழையின் காரணமாக மாவட்ட நிர்வாகம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை கொடுத்துள்ளது . குமரி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளான பேச்சி பாறை , களியல் , திற்பரப்பு , மாத்தூர் , திருவட்டார் , குமாரபுரம் படப்ப குளம் பகுதி , சரல் விளை, கொற்றிகோடு  போன்ற பகுதிகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது . தக்கலை குலசேகரம் பாதையில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக போக்குவரத்து பாதிக்க பட்டுள்ளது .

சானல் கரைகளிலும் தாழ்வான இடங்களிலும் வசித்த மக்களின் வீடுகள் இடிந்து அவர்கள் வசிக்க முடியாத வண்ணம் மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர் .கொற்றிகோடு குமாரபுரம் பகுதிக்கு உட்பட்ட படப்ப குளம் பகுதி முழுவதும் வெள்ளத்தால் மூழ்கி விட்டது . பதினைந்திற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தால் அடித்து செல்ல பட்டது . இந்த பகுதி நிலமற்ற ஏழைகளுக்கு போராட்டத்தின் வாயிலாக அரசால் வழங்க பட்ட பகுதி . இன்று மீண்டும் இந்த மக்கள் வாழ வழியின்றி நிற்கிறார்கள் . அவர்களின் வாழ்வாதாரங்கள் இழந்து பரிதாபத்தோடு நிற்கின்றனர் . தக்கலை செல்லும் வழியில் இருக்கும் சரல் விளை பகுதி மிகவும் பாதிக்க பட்டுள்ளது .

பெருஞ்சிலம்பு பகுதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் வாழை மரங்களும் ரப்பர் மரங்களும் சாய்ந்துள்ளன . இதனால் மக்களுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. இதே போல் குமரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளும் மழையால் பாதிக்க பட்டுள்ளது . சில மாத்தூர் , மாத்தார் பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வான் வழியாக உணவு பொட்டலம் போட முடிவு செய்துள்ளது .
பேச்சி பாறை , களியல் போன்ற பகுதிகளில் படகு மூலம் மக்கள்  இடம் பெயர்ந்து வருகின்றனர் .அந்த அளவிற்கு வெள்ளத்தால் பல பகுதிகள் மூழ்கி விட்டன .இதற்கு முன்னர் மழையால் 1992 ஆம் ஆண்டு இப்படி ஒரு அழிவு ஏற்பட்டுள்ளது . வீடிழந்த மக்கள் அரசின் உதவியை எதிர் பார்த்து கொண்டிருக்கின்றனர் . சேதமாகிய விளை நிலங்களுக்கான இழப்பீட்டு தொகையை அரசு தர வேண்டும் எனவும் மக்கள் மத்தியிலிருந்து கோரிக்கைகள் எழுகின்றன .மழையால் பாதித்து கொண்டிருக்கும் வேளையில் அரசு மெத்தன போக்கை கடை பிடிப்பதாகவும் மக்கள் சொல்லுகின்றனர் . 

அரசு முழு வீச்சில் செயல் பட்டு வீடிழந்த மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கு வசதியை ஏற்படுத்தி அவர்களுக்கு தேவையான உணவு கொடுக்க வேண்டும் என்பதே மக்களின்  தற்போதைய கோரிக்கையாக இருக்கிறது .மக்களுக்கான நிவாரண பணிகளை தொண்டு நிறுவனங்களும் சில கட்சி தொண்டர்களும் முழு வீச்சில் செய்து வருகின்றனர் . இன்னும் அதிகமாக மக்கள் பணியில் இளைஞர்கள் வந்து இந்த மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவிகளை மனிதாபிமான அடிப்படையில் செய்ய வேண்டும் .

2 comments:

Unknown said...

நமது லக்கிஸ்டார் உறுப்பினர்கள் களியல் பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்........

Kotticode said...

shibi said...

நமது லக்கிஸ்டார் உறுப்பினர்கள் களியல் பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்........
//////////////////////

லக்கி ஸ்டார் நண்பர்கள் மேலும் பல நற்பணிகளில் ஈடுபட வாழ்த்துக்கள்

Post a Comment

Updates Via E-Mail