Friday, November 5, 2010

எந்த வழியா கொற்றிகோட்டிற்கு வர்றது ?

நாளைய காலங்களில் இணைய தளம் வழியாக தங்களுக்கு வேண்டிய தகவல்களை தெரிந்து கொள்வது மிகவும் எளிதானதாக இருக்கும் அதனடிப்படையில் கொற்றிகோடு தகவல்களை பார்க்கும் போது கொற்றிகொட்டிற்கு செல்லும் பாதைகள் பேருந்துகள் பற்றிய தகவல்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற நோக்கத்தில் தான் இந்த பதிவு.

கொற்றிகோட்டிற்கு வரும் பாதைகள்

நாகர் கோவிலிலிருந்து வருபவர்கள் தக்கலை வழியாகவும் அழகிய மண்டபம் வழியாகவும் வரலாம். தக்கலையிலிருந்து குலசேகரம் செல்லும் பாதை வழியாக வர வேண்டும் . பத்மநாபபுரம் , மருந்து கோட்டை , சரல் விளை , முட்டைகாடு ஆகிய ஊர்கள் தாண்டி குமாரபுரம் வர வேண்டும். குமரபுரத்திலிருந்தே கொற்றிகோடு துவங்குகிறது. குமார புரத்திலிருந்து வலது பக்கமாக செல்லும் சாலை வழியாக சென்றால் கொற்றிகோடு வரும். அரை கிலோ மீட்டர் சென்றால் இடது பக்கத்தில் மீட் நினைவு C.S.I கொற்றிகோடு திருச்சபை காணப்படும் . அந்த சாலை பண்ணி பொத்தை வரை செல்லும் . குமாரபுரத்திலிருந்து நேராக அரை கிலோ மீட்டர் சென்றால் கொற்றிகோடு காவல் நிலையம் வரும்.

அழகிய மண்டபத்திலிருந்து வருபவர்கள் மேக்காமண்டபம் வந்து மேக்கா மண்டபம் சந்தை வழியாக செம்பருத்தி விளை வந்து முட்டைகாடு வர வேண்டும் . முட்டை காட்டிலிருந்து மேற் குறிப்பிட்டவாறு வர வேண்டும் .

மார்த்தாண்டத்திலிருந்து வருபவர்கள் அழகிய மண்டபம் வந்தும் வரலாம், இல்லை மேக்காமண்டபம் வந்தும் மேற் குறிப்பிட்ட வழியாக வரலாம். இல்லைஎன்றால் வேர்கிளம்பி வந்து மணலிக்கரை ,சித்திரங்கோடு வந்து அதிலிருந்து வலது பக்கமாக ஒரு கிலோ மீட்டர் வந்தால் குமாரபுரம் வரும்.

குலசேகரம் பகுதியிலிருந்து வருபவர்கள் தக்கலை சாலை வழியாக நேராக வந்தால் போதும் சித்திரங்கோடு வந்து அடுத்த பகுதி குமாரபுரம் வரும் . கொற்றிகோட்டிற்கு வருவதற்கு குமாரபுரம் ஒரு முக்கியமான சந்திப்பாக இருக்கிறது . அதிலிருந்து மேற் குறிப்பிட்ட வழியாக வரலாம் .


பேருந்துகள் விபரம் - இறங்கும் இடம் கொற்றிகோடு

நாகர் கோவில் -பெருஞ்சிலம்பு 13 J VFast
திருநெல்வேலி - பண்ணி பொத்தை SSS 888
தக்கலை - பெருஞ்சிலம்பு 13 J
குளச்சல் - பண்ணி பொத்தை 92
தக்கலை - வேளிமலை 13 J
மார்த்தாண்டம் - பெருஞ்சிலம்பு

சிற்றுந்து (மினி பஸ் ) இறங்கும் இடம் கொற்றிகோடு

அழகிய மண்டபம் - பெருஞ்சிலம்பு 15 நிமிடத்திற்கு ஒருமுறை
தக்கலை - பெருஞ்சிலம்பு 30 நிமிடத்திற்கு ஒரு முறை


குலசேகரம், திற்பரப்பு, பேச்சிப்பாறை, அருமனை செல்லும் பேருந்துகள் வழியாக வந்தால் கொற்றிகோடு காவல் நிலையம் அல்லது குமாரபுரத்தில் இறங்கி கொற்றிகொட்டில் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம் .


உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்

0 comments:

Post a Comment

Updates Via E-Mail