Wednesday, October 27, 2010

குமாரபுரம் பேரூராட்சி ஒரு பார்வை

குமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்டது தான் குமாரபுரம் பேரூராட்சி. இந்த பேரூராட்சி கோதநல்லூர் கிராமத்தில் ஒரு பகுதியும் , வெளிமலை கிராம பகுதிகளை கொண்டது. தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இந்த பேரூராட்சி ஒரு பகுதி தோவாளை ஊராட்சி ஒன்றியத்தை எல்லையாகவும் இன்னொரு எல்கை திருவட்டார் ஒன்றியத்திற்கு உட்பட்ட வேர்கிளம்பி பெரூராட்சியும் இன்னொரு எல்கை கோதநல்லூர் பெரூராட்சியும் ஆகும்.

இந்த பேரூராட்சியில் மணலிக்கரை, மனக்காவிளை , பூவங்கா பரம்பு, கொற்றிகோடு, கூழ கடை, கரும்பாறை, கைதோடு, பெருஞ்சிலம்பு, பண்ணி பொத்தை, வேளிமலை போன்ற ஊர்கள அடங்கும். வேளிமலை ,பெருஞ்சிலம்பு , பண்ணி பொத்தை போன்ற பகுதிகள் ஒரு காலத்தில் நெல் விவசாயம் அதிகமாக இருந்த நிலங்கள். ஆனால் இன்று ரப்பர் விவசாயமாக மாறியுள்ளது. இதில் வேளிமலை மலை பகுதியாகும். இந்த மலையில் பெரும்பான்மை பகுதிகள் குரியன் கம்பெனிக்கு உரிமை பட்டதாகவும் , மற்ற பகுதிகள் (ஆர் கே) சைராஸ் கிங்ஸ்லி அவர்களுக்கு உரிய எஸ்டேட் களாக இருக்கின்றன.

சுமார் 15௦௦௦ மக்கள் குமாரபுரம் பேரூராட்சியில் வசிக்கின்றனர். 85 சதவீத மக்கள் கல்வியறிவு பெற்றவர்களாக இருக்கின்றனர். மணலிக்கரை புனித மேரி கொரற்றி மேல் நிலை பள்ளி கல்வியில் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இருக்கிறது. குமாரபுரம் பேரூராட்சியில் கொற்றிகோடு பகுதியில் ஒரு காவல் நிலையம் இருக்கிறது. இது முதலில் கொற்றிகோடு புற காவல் நிலையமாக இருந்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கொற்றிகோடு காவல் நிலையமாக மாறியுள்ளது.

மணலிக்கரையில் மகளிர் மேல்நிலை பள்ளியும் ஓன்று உள்ளது. மற்றும் குமாரபுரத்தில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்றும், கொற்றிகோட்டில் அரசு நடுநிலை பள்ளியும், சி.எஸ்.ஐ மீட் நினைவு ஆங்கில பள்ளியும், ஆக்ஸ்போர்டு ஆங்கில பள்ளியும் , கூளக்கடை சோலாபுரத்தில் ஆங்கில பள்ளியும், பெருஞ்சிலம்பில் அரசு நடுநிலை பள்ளி ஒன்றும் காணப்படுகிறது. மணலிக்கரையில் ஒரு தொழில் கல்வி நிறுவனமும் இருக்கிறது.

..................................................... தொடரும்


அன்புடன் கொற்றிகோடு சுரேஷ் குமார்

0 comments:

Post a Comment

Updates Via E-Mail