Friday, October 1, 2010

என்ன இவ்வளவு கிளைகளா ?

வயதில் மூத்த பெரியவர்கள் எப்போதுமோ ஒரு நபரை அடையாள படுத்த வேண்டும் என்றால் முதலில் அப்பா பெயரை சொல்வார்கள் அடுத்த கட்டம் விளை பெயரை சொல்வார்கள் இது தான் கொற்றிகோட்டில் காலம் காலமாக நடந்து வருகிறது . ஆனால் இப்போது உள்ள பலருக்கு விளை பெயர்கள் தெரிவதில்லை. குறிப்பாக குமரி மாவட்டத்தில் எல்லா ஊர்களிலும் பல விளைகள் காணப்படும். ஆனால் எனக்கு தெரிந்த வரையில் கொற்றிகொட்டில் அதிக விளை பெயர்கள் காணப்படுகின்றன .
C.S.I MEAD MEMORIAL CHURCH KOTTICODE
விளை பெயர்கள் எப்படி வந்தது ?
அனைத்து விளை பெயர்களும் காரண பெயர்களே. ஒரு காலத்தில் ஒரே சர்வே எண் கொண்டதாகவும் ஒரே நபர்கள் அல்லது ஒரு குடும்ப வழி தோன்றல்கள் கைவசம் வைத்திருந்த தோட்டங்கள் ( அதாவது விளை ) இன்று அந்த பெயர்களில் இருக்கின்றன . நகரங்களில் இப்போது தெரு பெயர்கள் இருப்பது போல இங்கே விளை பெயர்கள் இருக்கின்றன.

இன்று இந்த விளை பெயர்கள் மிகவும் முக்கியமானதாக காணபடுகிறது, மக்கள் நெருக்கம் அதிகமானதால் விளை பெயர்கள் சொன்னால் தான் ஒரு நபரை அடையாளம் தெரிந்து கொள்ள வேண்டிய நிலைமை இருக்கிறது . அதனால் முதலில் விளை பெயர்கள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் .
VELIMALAI ESTATE VIEW
கீழ் வருவன விளை பெயர்கள்

  1. சரல் விளை
  2. நெடு விளை
  3. புளியறவிளை
  4. தமமத்து விளை
  5. தாறா விளை
  6. பட்டன் விளை
  7. வலிய விளை
  8. ஆன கட்டி விளை
  9. சுனைப்பாற விளை
  10. பிலாங்கால விளை
  11. குழி விளை
  12. பிலாங்கன்று விளை
  13. கன்று பிலா விளை
  14. வாணாங்கோட்டு விளை
  15. தீப்பாஞ்சான் விளை
  16. கிழங்கு விளை
  17. எள்ளு பாற விளை
  18. பாஞ்சி விளை
இவ்வாறு கொற்றிகோட்டில் பதினெட்டு விளைகள் உள்ளன . இந்த அனைத்து விளைகளும் கொற்றிகோடு தென்னிந்திய திருச்சபையை மையமாக வைத்து தான் இருக்கின்றன .

4 comments:

சிவகுமாரன் said...

சிறு வயதில் எங்க டீச்சர் வீட்டுக்கு களியக்காவிளை லீவுக்கு வந்திருக்கேங்க. ரொம்ப ரம்மியமான இடம்.
பகிர்வுக்கு நன்றி

இக்பால் செல்வன் said...

எனக்கு கன்னியாக்குமரி என்றால் மிகவும் பிடிக்கும். எதிர்காலத்தில் வாழ்ந்த்தால் குமரியில் வாழவேண்டும் என்பதே என்ஆசை. உலகத்தரத்தில் குமரி மாவட்டம் உயர் பாடுபடவேண்டும், சுற்றுலா, கல்வித் துறையில் குமரி மாவட்டம் உயரப் பாடுப்பட வேண்டுகிறேன். இத்தளம்மேலும்மேலும் எழுத வாழ்த்துக்கள்

Kotticode said...

சிவகுமாரன் said...
சிறு வயதில் எங்க டீச்சர் வீட்டுக்கு களியக்காவிளை லீவுக்கு வந்திருக்கேங்க. ரொம்ப ரம்மியமான இடம்.
பகிர்வுக்கு நன்றி

////////////////

உங்கள் கருத்திற்கு நன்றி சிவகுமார். தொடர்ந்து எங்களோடு இருங்கள்

Kotticode said...

இக்பால் செல்வன் said...
எனக்கு கன்னியாக்குமரி என்றால் மிகவும் பிடிக்கும். எதிர்காலத்தில் வாழ்ந்த்தால் குமரியில் வாழவேண்டும் என்பதே என்ஆசை. உலகத்தரத்தில் குமரி மாவட்டம் உயர் பாடுபடவேண்டும், சுற்றுலா, கல்வித் துறையில் குமரி மாவட்டம் உயரப் பாடுப்பட வேண்டுகிறேன். இத்தளம்மேலும்மேலும் எழுத வாழ்த்துக்கள் ////////////////////////


நன்றி இக்பால் அவர்களே கட்டாயம் உங்கள் விருப்பம் ஒரு நாள் நிறைவேறும். நாங்களும் அதற்காக முழு மூச்சுடன் பாடுபடுவோம். என்பதை தெரிவித்து கொள்கிறோம் . அன்புடன்

Post a Comment

Updates Via E-Mail