Friday, May 21, 2010

கொற்றிகோட்டிற்கு பெருமை சேர்த்த ஜோயல் டேவிஸ் . வாழ்த்துகிறோம் நாங்கள் !


தமிழகத்தின் தெற்கு எல்லையில் அமைந்துள்ள எழில் கொஞ்சும் நாஞ்சில் நாட்டின் வேளிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள கொற்றிகோட்டில் பிறந்து வளர்ந்த ஜோயல் டேவிஸ் அவர்கள் சமீபத்தில் வெளிவந்த மத்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று பிறந்த ஊருக்கு பெருமை சேர்த்திருக்கிறார் . அவரை கொற்றிகோடு லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக மனமார வாழ்த்துகிறோம்.

ஜோயல் டேவிஸ் அவர்களுக்கு பாராட்டு விழா நடை பெற்ற போது எடுத்த படம்

குமரி மாவட்டம் கல்குளம் பகுதி குமார புரம் பேரூராட்சிக குட்பட்ட பகுதியில் கொற்றிகோடு என்னும் அழகிய ஊர் அமைந்துள்ளது. கொற்றி கோட்டில் ஒரு காவல் நிலையம் காணபடுகிறது . இங்கு பல்வேறு பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். குமரி மாவட்டத்தில் பெரும்பாலானவர்கள் தெரிந்த ஊராக திகழ்ந்து வருகிறது. இந்த ஊரில் இதுவரை யாரும் ஐ ஏ எஸ் தேர்வில் வெற்றி பெற்றதில்லை . முதன் முறையாக திரு . டேவிட்சன் அவர்கள் மகனாகிய ஜோயல் டேவிஸ் வெற்றி பெற்றுருக்கிறார் .

விடாமுயற்சியோடு படித்து எடுத்த குறிக்கோளில் உறுதியாக நின்று சாதித்து காட்டிய நண்பருக்கு கிளப் சார்பாக வாழ்த்துவதில் நாண்கள் பெருமையடைகிறோம் . இவர் ஒரு சிறந்த கைப்பந்தாட்ட வீரரும் கூட கிளப் - காக பல போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார் என்பது குறிப்பிட தக்கது .
உன் திறமையால் பதவிகள் பல பெற்று ! உன் சேவையால் ஏழை எளிய மக்கள் நலன் பெற மென் மேலும் வளர வாழ்த்துகிறோம்


அவருடைய Orkut Profile .
http://www.orkut.co.in/Main#Profile?uid=5168466971937289891 நீங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்ளுங்கள்

மேலும் தொடர்புக்கு luckystar@kotticode.com ( Club Email Id)

1 comments:

cheena (சீனா) said...

அன்பின் ஜோயல் டேவிஸிற்கு நல்வாழ்த்துகள் - பாராட்டுகள்

நட்புடன் சீனா

Post a Comment

Updates Via E-Mail