Tuesday, November 3, 2009

லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் முயற்சிக்கு கிடைத்த பலன்.............


கொற்றிகோடு என்னும் ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.இந்த ஊரில் பலதரப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இருப்பினும்,அனைவரையும் ஓன்று சேர்ப்பது நட்பு.நட்பின் மூலம் நன்மையும் கிடைக்கும்,தீமையும் விழையும்.

ஆனால் கொற்றிகோட்டில் இதுவரை நண்பர்களால் அழிந்த சரித்திரம் இல்லை.எப்படியெனில் ஒற்றுமை என்பதையே ஒரே குரலில் பாடி வருகிறோம்.

இங்குள்ள அனைவரும் காலையில் எங்கு சென்றாலும்,மாலையில் மைதானதிற்கு வந்து விடுவார்கள்.அதை வைத்தே லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்பானது உருவானது.

இந்த கிளப் விளையாட்டிற்கு மட்டுமல்லாமல் பல நற் திட்டங்களும் செய்து வருகின்றது.

இப்படியாக இயக்கம் பெரிதும் ஊருக்காக உதவி வரும் தருணத்தில்,அரசியல் ரீதியாக இயக்கத்திற்கு எந்த விதமான ஒத்துழைப்பும் கிடையாது.அந்த அரசியல் பிரமுகர்களுக்கு சொல்ல விரும்புவது ஒன்றே ஓன்று தான்.

"உபகாரம் செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாதே"

இந்த வலைபகுதியில் என்னை ஆசிரியராக சேர்த்த திரு.சுரேஷ் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

0 comments:

Post a Comment

Updates Via E-Mail