Wednesday, October 7, 2009

இயக்கம் சார்பாக மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள்

கொற்றிகோடு லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது .

குமரி மாவட்டம் குமாரபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கொற்றிகொட்டில் லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் கடந்த பத்து ஆண்டுகளாக செயல் பட்டு வருகிறது . இளைஞர்களாலேயே துவங்கப்பட்டு இளைஞர்களாலேயே வழி நடத்தி வெற்றி கரமாக செயல் பட்டு வருகிறது .

இளைஞர்கள் விளையாட்டுகளில் அதிக அக்கறை காட்டுவதோடு சமூக சிந்தனைகளிலும் ஈடு பாடு உள்ளவர்களாக அமைய அனைவரும் போற்றும் வண்ணம் செயல் பட்டு வருகிறது . ஆண்டு தோறும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறது அதில் ஒரு பகுதியாக கொற்றிகோடு பகுதியில் உள்ள ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது . 95 மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன . லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் சமூக சிந்தனைகளை ஊர் போது மக்கள் பாராட்டினார்கள் .






0 comments:

Post a Comment

Updates Via E-Mail